R B Udayakumar : திமுக ஆட்சியில்.. யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. கொதிக்கும் ஆர்.பி.உதயகுமார்

By Raghupati R  |  First Published Dec 10, 2021, 1:09 PM IST

‘திமுக ஆட்சியில் பெண்களுக்கும் பொதுமக்களுக்கும், தற்போது மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.


முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மணிகண்டன் கல்லூரி மாணவரை சனிக்கிழமை அன்று முதுகுளத்தூர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கடுமையாக தாக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்து ஞாயிற்றுகிழமை நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு நீதி புதைக்கப்பட்டுள்ளது.  

Tap to resize

Latest Videos

தற்போது நீதியரசர்கள் இதற்கு மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டு இருந்தார்கள். திமுக ஆட்சி காலத்தில் இது புதிதல்ல கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் சட்டக் கல்லூரி வாசலில் மாணவர்களிடையே ஒருவருக்கொருவர் கொலைவெறி தாக்குதல் செய்தனர். இதை அருகில் நின்றுகொண்டிருந்த காவல்துறை யார் உத்தரவுக்காக நின்று கைகட்டி வாய்மூடி நின்று வேடிக்கை பார்த்தது. 

இதில் மாணவர் பாரதி கண்ணன் கடுமையாகத் தாக்கப்பட்டார். புரட்சித்தலைவி அம்மா இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து நீதியை நிலைநாட்டிட தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து அதனை தொடர்ந்து மாணவரணி சார்பில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உத்தரவிட்டார். அப்போது நான் மாநில மாணவரணி செயலாளராக இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை அம்மாவின் உத்தரவுக்கிணங்க நடத்தினேன்.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலியான மாணவர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரண உதவி மற்றும் குடும்பத்திற்கு அரசு வேலை தர வேண்டும். அதேபோல்,  மரணத்தில் காவல்துறை சேர்ந்த மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். ஆகவே, ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்ற தாய் நீதி கேட்டு போராடி வருகிறார். 

வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தையும் நீதி கிடைக்க வேண்டும் கேட்டு வருகிறார். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என்று மாநில அம்மா பேரவை அரசுக்கு இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாது இந்த ஆட்சியில் பெண்களுக்கும் பொதுமக்களுக்கும், தற்போது மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே மனிதநேயத்துடன் நீதியை அரசு நிலைநாட்ட வேண்டும். இதுபோன்று சம்பவங்கள் இனியும் தொடரக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

click me!