Work from home: எப்போது வேண்டுமானாலும் ஐடி கம்பெனிகள் திறக்கலாம்.. அமைச்சர் செய்த அலர்ட்.

By Ezhilarasan BabuFirst Published Dec 10, 2021, 12:33 PM IST
Highlights

அலுவலக சூழ்நிலை வீடுகளில் இருக்காது. அலுவலகத்தில் வேலை பார்பத்தையே இரு தரப்பினரும் விரும்புகின்றனர். வீடுகளில் இருந்து வேலை பார்பவர்கள் உடனடியாக  அலுவலகங்கள் வருமாறு எந்த நிறுவனங்களும் அறிவுறுத்தவில்லை.
 
 

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் 80 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்றும், உள்ளாட்சி தரவுகளை மின்னணு மயமாக்குவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கபடும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க்கில் கொரோனாவிற்குப் பிறகு ஐ.டி நிறுவன ஊழியர்கள் பணிக்குத் திரும்புதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில்  நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத் துறையின் மேம்பாடு மற்றும் இன்றைய தேவை பற்றியும் ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: இன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஆலோசனை நடைபெற்றது. கொரோனா பேரிடர் கால ஊராடங்கிற்க்கு பிறகு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிவோர் வீடுகளிலிருந்து அலுவலகத்தில் வந்து பணியாற்றுவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியனாக மாற்றுவது குறித்தும் ஆலோசித்ததாக கூறினார். 

தற்போது ஓமிக்ரான் பரவலானது அச்சுறுத்தலாக இருந்து வருகிறது மூன்றாவது அலை ஏற்படும் பட்சத்தில் மிகவும் கவனமாக தொழில் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றார். அலுவலகங்கள் வந்து பணியாற்றுவது குறித்து பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசித்ததாகவும்.
பேரிடர் காலங்களில் தொழிற்துறையில் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து கொள்வதுதான் சிறந்த அரசு என்றார. அலுவலக சூழ்நிலை வீடுகளில் இருக்காது. அலுவலகத்தில் வேலை பார்பத்தையே இரு தரப்பினரும் விரும்புகின்றனர். வீடுகளில் இருந்து வேலை பார்பவர்கள் உடனடியாக அலுவலகங்கள் வருமாறு எந்த நிறுவனங்களும் அறிவுறுத்தவில்லை.

ஆனால் பாதுகாப்பு நடவடிகைகளுடன் 100% பணியாட்களை பயன்படுத்த அனுமதியுள்ளதாக கூறினார். கொரோனா காலத்தில் படிப்பை முடித்த இளைஞர்களுக்கு தற்போது வேலை கிடைக்கிறதா என்று கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நிறுவனங்கள் திறமை மிக்க இளைஞர்களை வேலைக்கு எடுக்கின்றனர். நிச்சயமாக தகவல் தொழில்நுட்பத் துறைக்கு திறம் வாய்ந்த இளைஞர்களை தமிழக அரசு கொடுக்கும் என்றார். உள்ளாட்சி அமைப்புகளின் தரவுகளை மின்னணு மயமாக்குவதின் முன்னோட்டமாக கன்னியாகுமரியில் செயல்படுத்தப்பட்டது. அனைத்து உள்ளாட்சி தரவுகளையும் மின்னணு மயமாக்குவது குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு ஆலோசிக்கப்படும் என்றார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் 80 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் அவர்களது குடும்பத்தினரும் தடுப்பூசி செய்து கொண்டுள்ளதாகவும் நிறுவனங்கள் தெரிவிப்பதாகக் கூறினார். கன்னியாகுமரியில் மீனவப் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நரிக்குறவர் இன பெண்ணை குழந்தையுடன் நடத்துனர் இறக்கி விட்டுள்ளார் ? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த அரசானது சமூக நீதிக்கான அரசு நிச்சயமாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
 

click me!