BJP : கோவையில் 1 ஓட்டு.. கேரளாவில் 6 ஓட்டு.. படுதோல்வி அடைந்து மண்ணை கவ்விய பாஜக..

By Raghupati RFirst Published Dec 10, 2021, 12:19 PM IST
Highlights

கேரளாவில் நடைபெற்ற நகராட்சி இடைதேர்தலில் பாஜக வேட்பாளர் வெறும் 6 வாக்குகள் மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது. 

கேரளாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு 32 வார்டுகளில் நகராட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்கள் உட்பட பல்வேறு முக்கிய வார்டுகளில் இடை தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆளும் சிபிஎம் கட்சியின் இடதுசாரி கூட்டணியான எல்டிஎப் 32 வார்டுகளில் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியான யுடிஎப் 11 வார்டுகளில் வென்றது. 

மீதம் உள்ள 5 வார்டுகளில் 4ல் சுயேட்சைகள் வெற்றிபெற்றனர். 1 இடத்தில் மட்டும் பாஜக வெற்றிபெற்றது. எர்ணாகுளத்தில் இருக்கும் பைரவம் நகராட்சியில் ‘இடப்பள்ளிசிரா’ என்ற ஒரு வார்டில் மட்டும் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. பைரவம் நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் சமமான இடங்களை ஏற்கனவே எல்டிஎப் - யுடிஎப் பெற்று இருந்தது. 

அதாவது 13 இடங்களில் எல்டிஎப், 13 இடங்களில் யுடிஎப் வென்று இருந்தது. இடப்பள்ளிசிரா வார்டு இடைத்தேர்தல்தான் நகராட்சி தலைவரை தேர்வு செய்ய போகும் "டை பிரேக்கர்" தேர்தலாக கருதப்பட்டது. இந்த நிலையில் பைரவம் நகராட்சி இடப்பள்ளிசிரா வார்டு இடைத்தேர்தலில் இடதுசாரிகளின் எல்டிஎப் கூட்டணி 504 வாக்குகளை பெற்று வென்று மாநகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் யுடிஎப் கூட்டணி 478 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. 

ஆனால் பாஜக கட்சி இங்கு வெறும் 6 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்து இருக்கிறது.இதுதான் கேரளாவில் கடந்த இரண்டு நாட்களின் "ஹாட் டாபிக்". 2015ல் இதே தொகுதியில் பாஜக 30 வாக்குகளை பெற்று இருந்தது. தற்போது வெறும் 6 வாக்குகளை பெற்று மோசமான பின்னடைவை பாஜக சந்தித்து உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம்  ஊராட்சியில் 9ஆம் வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளராக அருள்ராஜ், அதிமுக வேட்பாளராக வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்தில், தேமுதிக சார்பில் ரவிக்குமார், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். 9ஆம் வார்டில் மொத்தல் 1,551 வாக்குகள் உள்ளன. 

தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. திமுகவை சேர்ந்த அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார். கட்சி சார்பில்லாமல் சுயேட்சையாக போட்டியிட்ட ஜெயராஜ் 240 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம்பிடித்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்தி ஒரே ஒரு ஓட்டு பெற்று படுதோல்வியை தழுவினார். 

இந்த செய்தி காட்டுத்தீ போல தமிழகம் முழுவதும் பரவியது. இதனால், “ஒத்த ஓட்டு பாஜக” ()என்று ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து பட்டையை கிளப்பினர். அதே போல, இப்போது கேரளாவிலும்  #Six_Votes_BJP என்றும், தமிழகத்தில் என்றும் சமூக வலைத்தளங்களில் பாஜகவை வச்சு செமையாக செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

click me!