அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுவேன்..! முன்னாள் அமைச்சர் பேச்சால் திடீர் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Jul 4, 2022, 2:34 PM IST
Highlights

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தானும் போட்டியிட இருப்பதாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

ஒற்றை தலைமை - தொடரும் பிரச்சனை

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு பிளவாக அதிமுக பிரிந்துள்ளது. இரட்டை தலைமையால் கட்சியின் செயல்பாடுகளில் துரிதமாக செயல்படமுடியவில்லை, கட்சியை வளர்க்க முடியவில்லையென இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்போ இப்போது என்ன புது பிரச்சனை வந்து விட்டது. இரட்டை தலைமையே தொடரட்டும், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டுமே புதிதாக பொதுச்செயலாளர் பதவிக்கு வாய்ப்பே இல்லையென கூறி வருகின்றனர். மேலும் அதிமுக சட்ட விதிகளின் படி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, அந்தமான் ஆகிய இடங்களில் உள்ள அதிமுக தொண்டர்கள் வாக்கெடுப்பு நடத்தி தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் என விதிகளில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிகளில் மாற்றம் கொண்டு வந்து பொதுக்குழு உறுப்பினர்களே பொதுச்செயலாளரை தேர்வு செய்யலாம் மாற்றம் செய்ய இபிஎஸ் தரப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர்.

பணம் கொடுத்தால் மு.க.ஸ்டாலின் கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம்..! இபிஎஸ் அணியை கலாய்க்கும் டிடிவி தினகரன்

தேர்தல் வைத்து தலைமை தேர்ந்தெடுக்க வேண்டும்

இந்தநிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக தொண்டர்களுக்குள் ஏற்பட்டுள்ள வேதனையை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வெளிப்படுத்தினார். அதில்,  ஓபிஎஸ்-இபிஎஸ் என நான் யாருக்கும் இல்லையென கூறினார். தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ஒற்றைத் தலைமையேற்க்கட்டும் என தெரிவித்தார்.  ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா? என கேள்வி எழுப்பியவர்,   எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என கூறினார். தேர்தல் நடத்தட்டும், நான் நிற்கிறேன் என்னை போல் 100 பேர் நிற்பார்கள் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் தலைமை ஏற்கட்டும் என கூறினார். அதிமுக தொண்டர்களின் கட்சியென தெரிவித்தார். அதிமுகவில் எவ்வளவோ பிரச்சனை வந்தது யாராவுது கட்சியை விட்டு சென்றார்களா என கேள்வி எழுப்பினார். கட்சியின் கரை வேட்டியோடு வேதனையோடு வேடிக்கை பார்ப்போம் என கூறினார். 

பொதுக்குழு உறுப்பினர்கள் பணம் வாங்கினார்களா.? வைத்தியலிங்கம்,டிடிவிக்கு எச்சரிக்கை விடுத்த கே.பி.முனுசாமி

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்

தற்போது உள்ள நிலையை பார்த்து  பல லட்சம் தொண்டர்கள் வேதனையோடு உள்ளதாக கூறினார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பார்கள் என தெரிவித்தார். இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் உள்ளது. அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான் என கூறினார்.

இதையும் படியுங்கள்

இந்த உத்தரவு பொருந்தாது.. ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்..!


 

click me!