ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியலிங்கம், டிடிவி தினகரன் கூறியதற்கு அதிமுக மூத்த நிர்வாகி கே.பி. முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை 69 மாவட்ட செயலாளர்களும்,2400க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ஓபிஎஸ் தரப்போ ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லையென கூறிவருகிறது. மேலும் அதிமுகவில் பொதுச்செயலாளரை அடிமட்ட தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், தலைமை கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க முடியாது என கூறிவருகின்றனர். இந்தநிலையில் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன், அதிமுகவில் தனி நபர்களை விலைக்கு வாங்கி ஆதரவு என்கிற பெயரில் தலைமை பதவிக்கு வருவதை இபிஎஸ் முயற்சி செய்வதாகவும், ஓபிஎஸ் அதனை தடுக்க முயற்சி செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். திமுக தலைவர் ஸ்டாலினே பேரூராட்சி செயலாளருக்கு 50 லட்சத்தில் ஆரம்பித்து மேலே உள்ளவர்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவில் பொதுச் செயலாளர் ஆகிவிடலாம் என கூறினார். இதே போல ஓபிஎஸ் ஆதரவாளர்களாம வைத்தியலிங்கமும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார்.
திட்டமிட்டபடி பொதுக்குழு
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இபிஎஸ் ஆதரவாளரும் மூத்த அதிமுக நிர்வாகியுமான கே.பி.முனுசாமி கூறுகையில், ஜூலை 11 தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறினார். எடப்பாடி பழனிசாமி ஆதரவுக்காக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கியதாக டிடிவி தினகரன், வைத்தியலிங்கம் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், அது அவர்களின் விரக்தியை காட்டுவதாக தெரிவித்தார். அதிமுகவின் தொண்டர்களாக இருந்தவர்கள், ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்கள், அப்படி உள்ளவர்கள் கழகத் தொண்டன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை பதிவு செய்கின்றார்கள் என்றால் மிகவும் வேதனை தருவதாக உள்ளதாக கூறினார். அதுவும் வைத்தியலிங்கம் கூறியது மிகவும் வேதனையாக இருப்பதாக தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்..! அதிமுகவினர் அதிர்ச்சி
நீதிமன்றத்தில் வழக்கு
நேற்று வரை பல்வேறு பொறுப்புகளில் பதவிகள் இருந்தவர் வைத்திலிங்கம், எங்களுடன் ஒன்றாக பயணித்தவர்கள். ஆனால் சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிடிவி தினகரன், 25 லட்சத்திலிருந்து 5 கோடி ரூபாய் வரை அதிமுக மாவட்ட செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கி இருப்பதாக கூறியுள்ளார். மீண்டும் ஒருமுறை தினகரன் இதே கருத்தை சொன்னால் நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும் என எச்சரிப்பதாக தெரிவித்தார். அதிமுகவிற்கு எந்த தியாகத்தையும் செய்யாதவர் டிடிவி தினகரன், அதிமுகவால் பலனடைந்தவர் தினகரன், அவர் எல்லாம் எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை, அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
இந்த உத்தரவு பொருந்தாது.. ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்..!