RSS-ன் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்சில் உள்ளவர்களை இஸ்லாத்தில் இருந்தே விரட்டுங்க.. தடா ரஹீம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 4, 2022, 12:10 PM IST
Highlights

ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளையும் , உறுப்பினர்களையும் இஸ்லாத்தை விட்டு விரட்ட வேண்டும் என தமிழக ஜாமஅத்துல் உலமா சபைக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளது. 

ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளையும் , உறுப்பினர்களையும் இஸ்லாத்தை விட்டு விரட்ட வேண்டும் என தமிழக ஜாமஅத்துல் உலமா சபைக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து  இந்த அமைப்பின் மாநில தலைவர் தடா ரஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கண்ணைய லால் படுகொலையில் சம்மந்தப்பட்ட இருவரில் ஒருவர் ரியாஸ் அத்தாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரியாஸ் அத்தாரி ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளுடனும் பாஜக உள்ளூர் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பு இருப்பது சமூக வளைய தளங்களில் மூலம் அம்பலமாகி உள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ரியாஸி மாவட்டம் டக்சன் கிராமத்தில் நவீன ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த இரண்டு பேரை பொது மக்கள் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த இரண்டு பேரில் ஒருவர் தாலீப் உசேன் ஷா ஆர்எஸ்எஸ் பாஜக சிறுபான்மை பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகி என்பது அம்பலமாகி உள்ளது ...

காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமீத் ஷா அவர்களுடைய முக்கிய ஆலோசனை கூட்டத்தில்  காஷ்மீரில் நவீன ஆயுதங்களுடன் பிடிபட்ட தலீப் உசேன் ஷா நின்று கொண்டு உள்ள புகைப்படங்கள் எல்லாம் சமூக வளைய தளங்களில் உலா வருகிறது.. இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்து கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் நாடு முழுவதும் அரசியல் அறுவடை செய்ய ஆர்எஸ்எஸ் பாஜக முயன்று உள்ளதே இந்த சம்பவங்கள் எடுத்து காட்டுகிறது.

ஆகையால் தமிழ் நாட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் ஜாமத்துல் உலமா சபை முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை இஸ்லாத்தை விட்டு நீக்கி அவர்களுடன் முஸ்லீம்கள் எந்தவொரு தொடர்பும் வைக்க கூடாது என மார்க உத்தரவு போடவேண்டும் ..

அதே போல் தமிழக அரசும் உளவுத்துறை மூலம் ஆர்எஸ்எஸ் பாஜகவின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளை சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!