தமிழகத்தில் பாஜகவா... ? வாய்ப்பு இல்லை ராஜா.. அமித்ஷாவையே ஆடவிட்ட வைகை செல்வன்

By Ajmal Khan  |  First Published Jul 4, 2022, 11:41 AM IST

தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமித்ஷா கருத்து சொல்லியிருக்கலாம் ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை எப்படி நிலை பெறும் என்பதை போகபோகத்தான் தெரியும் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
 


தமிழகத்தில் பாஜக ஆட்சி

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில்,   பா.ஜ.க.வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அமித்ஷா, நாட்டில் தொடர்ச்சியாக நடந்த தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அது கட்சியின் வளர்ச்சிக்கும், அரசியல் செயல்திறன்களுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என கூறினார். தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதும் என கூறினார். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் என உறுதி பட தெரிவித்தார். இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான் இருக்கும் என  கூறினார். மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், அமித்ஷாவின் கருத்துக்கு  பதில் அளித்துள்ளார். அதில்,

Tap to resize

Latest Videos

ஒரு மாநில ஆளுநர் இனிப்பு ஊட்டி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துவதா? கடுப்பாகும் சரத் பவார்..!

பணம் கொடுத்தால் மு.க.ஸ்டாலின் கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம்..! இபிஎஸ் அணியை கலாய்க்கும் டிடிவி தினகரன்

தமிழகத்தில் பாஜக ஆட்சி- வாய்ப்பு குறைவு

பாஜக மாநாட்டில் அமித் ஷா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது அவர்களுடையே ஆசையும், அவாவும் கூட என குறிப்பிட்டார்.  கட்சியின் நிலைப்பாட்டை கூறியுள்ளார். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை வலுவான திராவிட இயக்கங்கள்  கால் ஊன்றி உள்ளது. எனவே அமித்ஷாவின் இந்த பேச்சு   அடுத்த கட்டத்தை நோக்கி எவ்வாறு நகரும் என்பது கேள்வி குறி என குறிப்பிட்டார். சந்தேகத்திற்குரியது  என தெரிவித்தார். தென் மாநிலங்களை பொறுத்த வரை ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு,கேரளா, ஆகிய மாநிலங்களில் மாநில கட்சிகள்  வலுவாக இருப்பதாக தெரிவித்தார். மாநில உணர்வுகளோடு இயங்கி கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதற்க்கு எப்படி பாஜக ஈடு கொடுக்க போகிறது என்பதை கேள்வி குறி தான் என தெரிவித்தார்.

  தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமித்ஷா கருத்து சொல்லியிருக்கலாம் ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை எப்படி நிலை பெறும் என்பதை போகபோகத்தான் தெரியும் என கூறினார். எனவே பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு  வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவித்தார். பாஜகவுடன் தமிழகத்தில் முதல் முதலில் கூட்டணி வைத்தது திமுக என்றும் மத்திய அமைச்சரவையில் இருந்து ஆட்சி அதிகாரத்தை ருசித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி வேறு கொள்கை வேறு என குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

விரைவில் தமிழகம், தெலங்கானாவில் பாஜக ஆட்சி.. அடுத்த டார்கெட் தென்னிந்தியாதான்.. கர்ஜனை செய்த அமித் ஷா.!

 

click me!