ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஓபிஎஸ்..! எழுந்து நின்று வணக்கம் வைத்த பெஞ்சமின், வளர்மதி-நடந்தது என்ன.?

By Ajmal Khan  |  First Published May 28, 2023, 11:41 AM IST

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பென்ஜமின் மற்றும் வளர்மதி எழுந்து நின்று வணக்கம் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக ஆக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக எடப்பாடி அணிக்கு தாவி வருகின்றனர். இதன் கரணமாக ஓபிஎஸ், டிடிவியோடு இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அவருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமானம் செய்து வைத்தார்.

Tap to resize

Latest Videos

ஓபிஎஸ்யை வரவேற்ற அமைச்சர்கள்

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். அதே போல அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் பென்ஜமின், வளர்மதி ஆகியோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் முன் வரிசையில் திமுக அமைச்சர்களும் அமர்ந்து இருந்தனர். அப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். முன் வரிசைக்கு வந்த ஓபிஎஸ்யை  தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் எழுந்து நின்று வரவேற்றனர். அப்போது அமைச்சர்களுக்கு பின் வரிசையில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், வளர்மதி உள்ளிட்டோரும் ஓ.பி.எஸ் க்கு எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பெஞ்சமின் ஓ.பி.எஸ் தன்னை பார்க்கிறாரா என பார்த்தபடியே இரண்டு முறை வணக்கம் வைத்தார். 

ஓபிஎஸ்க்கு வணக்கம் வைத்த பென்ஜமின்

அதை தொடர்ந்து, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு அருகில் அமர்ந்திருந்த ஓ.பி.எஸ். நீண்ட நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தார். எடப்பாடிபழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இரண்டு முன்னாள் அமைச்சர்களும்  ஓபிஎஸ்க்கு சிரித்த முகத்தோடு வணக்கம் வைத்து வரவேற்றது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

எஸ்.பி வேலுமணி வீட்டில் ஏறி குதித்த காவல்துறை நடவடிக்கையை ரசித்தவர்கள் தானே திமுகவினர்-இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 

click me!