கரூரில் கொங்கு மெஸ் உணவகத்திற்கு வருமானவரித்துறையினர் சீல் வைத்தது ஏன்.? செந்தில் பாலாஜி பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published May 28, 2023, 9:15 AM IST

ஒரு வீட்டில் அதிகாலை நேரத்தில் கதவை தட்டும் போது எழுந்து வர 5 நிமிடங்கள் கூட ஆகலாம்.  அதை கூட பொறுத்து கொள்ளமுடியாமல் சுவர் ஏறி குதித்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. யார் வீட்டிற்குள்ளும் அதிகாலை நேரத்தில் ஒருவர் நுழையும் போது வருமான வரித்துறை என்ற சொன்னால் நம்புவார்களா.? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
 


வருமான வரித்துறை சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகம் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கரூரில் உள்ள பிரபலமான கொங்கு மெஸ் உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்கின்ற சுப்பிரமணி என்பவர் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர் ஆவார், உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் என் இல்லத்தை தவிர சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் இல்லத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வருமான வரி சோதனையை பொறுத்தமட்டில் முழுவிபரங்களை தெரிந்து கொண்டு வெளியிட வேண்டும். ஆர்வக்கோளாறால் செவிவழி செய்திகள் வெளியிடும்போது அது உண்மை என பொதுமக்கள் நம்பி விடும் நிலை இருப்பதாக தெரிவித்தார். 

கொங்கு மெஸ் உணவகத்திற்கு சீல் ஏன்.?

இதனால் உண்மை நிலை என்ன? எத்தனை இடங்களில் சோதனை நடக்கிறது? என்பது தெரியாமல் போய்விடும் என கூறினார்.  கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் கொங்கு மெஸ் உணவகத்தில் அதிகாரிகள் சீல் வைத்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் பள்ளி பயிலும் காலத்திலேயே தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் வருமான வரி செலுத்தி வருகின்றனர். வரிஏய்ப்பு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். வரி ஏய்ப்பு ஏதேனும் செய்யப்பட்டதாக தெரிய வந்தால் அதற்கான வரியை செலுத்தவும் தயாராக உள்ளனர்.  ஆடிட்டர் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் வரி செலுத்தி இருப்பார்கள் என கூறினார். மேலும் இரவு நேரத்தில் சோதனை முடித்து விட்டு மீண்டும் அடுத்த நாள் சோதனையை தொடருவார்கள் அதற்காக உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் மீண்டும் சீல் திறந்து சோதனை செய்வார்கள் என தெரிவித்தார். 

தகுதி இல்லாதவர் இபிஎஸ்

இதற்கு முன்பு சட்டசபை தேர்தல் நடந்தபோது சோதனை நடந்தது. இதே பகுதியில் ஜவஹர் பகுதியில்  தான் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது எந்த முடிவு கிடைதது என கேள்வி எழுப்பினார். தேர்தல் நேரத்தில் இது போன்று நடவடிக்கை எடுப்பார்கள். வரக்கூடிய தேர்தல் சமயத்தில் இதுபோன்ற சூழல்களை முன்னெடுக்கின்றனர். இன்னும் இரண்டொரு நாட்களில் சோதனை முடிவுக்கு வரும் என சொல்கிறார்கள். முழுவதுமாக முடிவடைந்த பிறகு நான் விளக்கம் அளிப்பதாகவும் கூறினார்.  எதிர்க்கட்சி தலைவர் என சொல்லவே தகுதி இல்லாதவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என விமர்சித்தவர், . வருமான வரி சோதனை பற்றி தகவல் இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளதை விமர்சித்துள்ளார். ஒரு வீட்டில் அதிகாலை நேரத்தில் கதவை தட்டும் போது எழுந்து வர 5 நிமிடங்கள் கூட ஆகலாம்.  

இரண்டு பைகளோடு சென்றது ஏன்.?

அதை கூட பொறுத்து கொள்ளமுடியாமல் சுவர் ஏறி குதித்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. யார் வீட்டிற்குள்ளும் ஒருவர் நுழையும் போது வருமான வரித்துறை என்ற சொன்னால் நம்புவார்களா.? மத்திய அரசின் சிஆர்பிஎப், சிஎஸ்ஐஎப் யாரோ ஒருவர் கூட வந்திருப்பார்களே என ஏன் என்றால் பல இடங்களில் போலியான சோதனை நடைபெறுகிறது. அதுவும் அதிகாரிகள் வரும் போதே இரண்டு பைகளோடு உள்ளே நுழைகின்றனர். அந்த பையில் என்ன இருக்கிறது என காட்டுங்கள் என கூறுகிறார்கள் இதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பினார். இருந்த போதும் வருமான வரித்துறையின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என செந்தில் பாலாஜி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

எஸ்.பி வேலுமணி வீட்டில் ஏறி குதித்த காவல்துறை நடவடிக்கையை ரசித்தவர்கள் தானே திமுகவினர்-இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 

click me!