5 ஜி அலைக்கற்றையில் மிகப்பெரிய ஊழல்..!பாஜக அரசு விசாரணை நடத்தவில்லையென்றால்..! அடுத்த அரசு விசாரிக்கும்-ஆ.ராசா

By Ajmal KhanFirst Published Aug 3, 2022, 12:29 PM IST
Highlights

51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது. இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி நடந்துள்ளது ? என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன்  விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

5ஜி அலைக்கற்றை ஏலம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலமான 2010ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய  தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து அலைக்கற்றை ஏலத்தில் 1.76 லட்சம் கோடி ஊழல் என செய்தி நாடு முழுவதும் வெளியானது. இதைத் தொடர்ந்து அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சியும் கவிழ்வதற்க்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனையடுத்து  இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்த வருவாய் இழப்பும் ஏற்பட்டதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏலம் நிறைவடைந்தது.

தொழிலாளர்களை வஞ்சிக்கும் திமுக...கொடுத்த வாக்குறுதியை ஓராண்டாக ஏமாற்றி சாதனை..! ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை

குறைவான தொகைக்கு ஏலம் போன 5ஜி  

இதில், 72,098 மெகாஹெர்ட்ஸில் 51,236 மெகாஹெர்ட்ஸ் (71%) மட்டுமே ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டது. சுமார் 5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போகும் என அரசு எதிர்பார்த்த நிலையில், வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கே ஏலம் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக  கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராச,30 மெகா ஹெட்ஸ் அலைகற்றையை ட்ரைய் என கூறப்படும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்த போது 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என வினோத் ராய் கூறினார்.  ஆனால் இன்று 51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது.

தனி நபர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தீர்களா..? நாடாளுமன்றத்தில் பாஜகவை அலறவிட்ட திருச்சி சிவா

5ஜி அலைக்கற்றையில் மோசடி

இது யாருக்காக செய்யப்பட்டது?எவ்வளவு மோசடி நடந்துள்ளது ? என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றார். 2ஜி,3ஜி,4ஜி ஒப்பிடும் போது 5ஜி அலைக்கற்றை 5-6 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகும் என மத்திய அமைச்சர் கூறினார், ஆனால் இப்போது 1.50 லட்சம் கோடி மட்டுமே ஏலம் நடந்துள்ளது. இதில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ளது என்பதால் டிராய் சேர்மன் வினோத் ராய் யாருக்காக இதை செய்தார் என விசாரிக்க வேண்டும் என ஆ.ராசா கூறினார். 

இதையும் படியுங்கள்

usd vs inr: nirmala sitharaman: இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சியா! அப்படி ஏதும் இல்லையே:சீதாராமன் உறுதி


 

click me!