ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் நேரில் ஆஜர் ! நீதிபதி ஆறுமுகசாமி விசாணை !!

 
Published : Jan 11, 2018, 10:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் நேரில் ஆஜர் ! நீதிபதி ஆறுமுகசாமி விசாணை !!

சுருக்கம்

Former chief secretary sheela balakrishnan in enquiry commission

உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  கடந்த 2016 டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். 

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைத்தது.

இந்த ஆணையம் முன்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பலர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்தனர்.

ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமி, ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதே போல், முன்னாள் தலைமை செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த டிசம்பர் 20 ஆம், ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.  ஆனால் அவர் இன்று  மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

இதையடுத்து இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை நேரில் சந்தித்தவர்கள் பட்டியலை விசாரணை ஆணையம் வெளியிட்டது. அதில் ஷீலா பாலகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!