
சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.விஜயகுமார் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார் என்பது வதந்தி.
வேலூர் மாவட்ட ஆட்சியராகவும், அரசின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருந்தவர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். தற்போது சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக அறங்காவலராக உள்ளார்.
அவர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல் பரவியது. ஆனால், அவரது ஓய்வுக்குப் பிறகு கடவுள் சேவை என அமைதியான வாழ்க்கை வாந்து வருகிறார் என்பதே உண்மை.