சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க பாஜகாவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க பாஜகாவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் ஆதரவு தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க திமுக அரசு முடிவு செய்தது. மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே 134 அடி உயரத்தில் பேனா வடிவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் பெருகின.
இதையும் படிங்க: இரட்டை இலை யாருக்கு? அதிமுக சின்னம் என்னவாகும்.? எடப்பாடி எதிராக ஓபிஎஸ் எடுத்த முடிவு - அதிமுகவினர் அதிர்ச்சி!
இந்த நிலையில் சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க பாஜகாவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில், பேனா பொதுவானது, பேனா சிலையை வைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக்கூடாது, அனைவரும் சுற்றுலா பார்வையிடக்கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு - யார் இந்த செந்தில் முருகன்.?
இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும், பேனா ஒரு சிறந்த கருவியாகும், சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த பேனா ஒரு அரசியல் கட்சிக்கு சேர்ந்தவையாக இருக்கக்கூடாது, இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பேனா பொதுவானது, பேனா சிலையை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக்கூடாது, அனைவரும் சுற்றுலா பார்வையிடக்கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram)