ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு - யார் இந்த செந்தில் முருகன்.?

By Raghupati R  |  First Published Feb 1, 2023, 7:10 PM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று ஓ.பி.எஸ் அறிவிப்பு.


ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுகவினர் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்தது .டிடிவி தினகரனின் அமமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டது.  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க..ஓபிஎஸ் எடுத்த கடைசி அஸ்திரம் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த பன்னீர் அணி !!

இந்த நிலையில் இன்று காலையில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு நிறுத்தப்பட்டுள்ளார். ஓபிஎஸ் அணி சார்பாக செந்தில் முருகன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி இன்று காலை  அறிவித்திருந்த நிலையில், தற்போது தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அப்போது பேசிய ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் எனவும் கூறியுள்ளார். பாஜக வேட்பாளர் போட்டியிடாவிட்டால் எங்கள் வேட்பாளர் உறுதியாக போட்டியிடுவார்.

இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு எந்த காலத்திலும் தடையாக இருக்கமாட்டேன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது. சின்னத்துக்கான படிவத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கையெழுத்து கேட்டால் போட்டு தர தயார்.

அதிமுக நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டியது ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தான். இந்திய தேர்தல் ஆணைய ஆணவப்படி, இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க..தே.ஜ கூட்டணிக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி.. டெல்லிக்கு போகும் அண்ணாமலை - டெல்லியின் பிளான் கைகொடுக்குமா?

click me!