ஈரோடு கிழக்கு தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக வேட்பாளரை அறிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுகவினர் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்தது .டிடிவி தினகரனின் அமமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க..தே.ஜ கூட்டணிக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி.. டெல்லிக்கு போகும் அண்ணாமலை - டெல்லியின் பிளான் கைகொடுக்குமா?
இந்த நிலையில் இன்று காலையில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு நிறுத்தப்பட்டுள்ளார். ஓபிஎஸ் அணி சார்பாக செந்தில் முருகன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், வேட்பாளர் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இரட்டை இலை சின்னம் என்னால் முடங்கும் சூழல் உருவாகாது.நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு நான் காரணமல்ல.
பாஜக நிலைபாட்டை அறிந்து கொள்வதற்காக அவசரப்பட வேண்டாம். தேசிய கட்சியான பாஜகவை முடிவு எடுக்கும்படி நிர்பந்திக்க முடியாது. பாஜக வேட்பாளரை அறிவித்தால், உடனடியாக எங்கள் வேட்பாளரை திரும்பப் பெற்றுவிடுவோம். பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடாவிட்டால், எங்கள் வேட்பாளர் உறுதியாக போட்டியிடுவார்.
இதையும் படிங்க..Bank holiday: பிப்ரவரி மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? இதோ !!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது. உச்சநீதிமன்ற விசாரணையின்போது எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம். அதிமுகவின் செயல்பாட்டை தீர்மானிக்க வேண்டியது ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்தான். அதிமுக விவகாரம் குறித்து முறைப்படி தேர்தல் ஆணையத்தை அணுகி இருக்கிறோம்.
இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தனி சின்னத்திலும் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார். சின்னத்துக்கான படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து கேட்டால் போட்டு தரத் தயார். அதிமுகவில் ஒற்றுமை இல்லாமல் போனதற்கு காரணம் நான் அல்ல. அது மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும்.
கலைஞரை எனக்கு பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கலைஞரின் பேனா சின்னத்தை உடைப்பேன் என சீமான் பேசியது கண்டனத்துக்குரியது. எந்த ஒரு அரசியல் அட்சி தலைவரும் நாகரிகத்துடன் பேச வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க..ஓபிஎஸ் எடுத்த கடைசி அஸ்திரம் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த பன்னீர் அணி !!