அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களை தட்டித்தூக்கிய திமுக.. கெத்து காட்டும் ஸ்டாலின்.. அதிர்ச்சியில் இபிஎஸ், ஓபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published Nov 10, 2022, 6:44 AM IST

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திடீரென திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். 


அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திடீரென திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். 

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியில் இணைவது வழக்கமான ஒன்று தான். ஆனால், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் உச்சம் பெற்றுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் இணைந்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போட்ட திமுக அரசு.. டிடிவி.தினகரன் விளாசல்..!

தமிழக முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், மயிலாடுதுறை மாவட்டம், அதிமுகவைச் சேர்ந்த பூம்புகார் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஏ.சி.என். விஜயபாலன், சீர்காழி தொகுதி முன்னாள் எம்எல்ஏ து. மூர்த்தி ஆகியோர் தலைமையில் நாகை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளரும், பரசலூர் ஊராட்சி மன்றத் தலைவருமான செம்பை த.சண்முகம், அம்மா பேரவை ஒன்றிய தலைவர் எம்.ரமேஷ், செம்பனார்கோவில் செல்வராஜ், சுரேஷ்குமார், சரவணன் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க;-  இளைஞர்களின் கனவில் மண்ணை போடும் திமுக.! மவுன சாமியாராக இல்லாமல் நடவடிக்கை எடுத்திடுக- ஸ்டாலினை விளாசும் இபிஎஸ்

click me!