மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்; மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்... விஜயபாஸ்கர் நம்பிக்கை!!

Published : Nov 09, 2022, 09:25 PM IST
மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்; மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்... விஜயபாஸ்கர் நம்பிக்கை!!

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமைத்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமைத்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பல்வேறு சோதனைகளை தாண்டி, கஷ்டங்களைக் கடந்து எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி அமையும் பொழுது மக்கள் இன்றைக்கு ஏங்கிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலத்தில் நிறைவேற்றப்படாத திட்டங்கள், எதிர்பார்த்து நடக்காத திட்டங்கள் எதிர்பார்த்து கிடைக்காத திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும். 

இதையும் படிங்க: 2024ல் 39 சீட் குறிச்சு வச்சுக்கோங்க ! எதிர்கட்சிகளை அலறவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !

இன்றைக்கு மின்கட்டண உயர்வு மக்களுக்கு ஷாக் அடிக்க கூடியதாக உள்ளது, அதேபோல் குடிநீர் பிரச்சினையால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மீண்டும் மெகா கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: அமைச்சருக்கு அங்கு என்ன வேலை.. நடையை கட்டு.!! அமைச்சர் சேகர்பாபுவை எச்சரிக்கும் பாஜக எச்.ராஜா

முன்னதாக புதுக்கோட்டை 16 ஆவது வார்டுக்கு உட்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் அதிமுகவின் 51 ஆவது பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்துக்கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் கல்வெட்டை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Thirumavalavan Speech: “தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக...” - மாநாட்டில் திருமாவளவன் சூளுரை.! மெய்மறந்து கேட்ட சிறுத்தைகள்.!
திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?