AIADMK: சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

By Raghupati R  |  First Published Jun 29, 2022, 12:48 PM IST

KP Anbalagan : தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன்

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன். தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Tap to resize

Latest Videos

சொத்துகுவிப்பு வழக்கு

தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் கே.பி.அன்பழகன் தேர்தலின் போது கணக்கு காட்டபட்ட சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர். அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். 

இதையும் படிங்க : MGR : ஒற்றை தலைமை விவகாரம் - அன்றே கணித்த எம்.ஜி.ஆர்.. தீர்வு இதுதான் !!

இதையும் படிங்க : AIADMK: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் நீக்கம்..இபிஎஸ் தரப்புக்கு திகில் காட்டிய ஓபிஎஸ் தரப்பு

உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தாரரான கிருஷ்ணமூர்த்தி மேலும் ஒரு வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்ததும் இன்னும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் எனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க : AIADMK: எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவும் வைத்திலிங்கம்? ஓபிஎஸ் அதிர்ச்சி !

click me!