
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக லட்சக்கணக்கான புகார்கள் வருகிறது, அதை அனைத்தையும் ஆராய்ந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசு ஒவ்வொரு அடியையும் பார்த்து அறிந்து எடுத்து வைத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் புதிய புதிய திட்டங்கள் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் எதிர்க்கட்சியான பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் இத்துறையில் நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றன. இது ஒரு புறம் உள்ள நிலைகள் சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் அரசுக்கும் கோயில் நிர்வாகத்திற்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து கருத்து கூறி வரும் அமைச்சர் சேகர்பாபு இந்த விவகாரத்தில் தொடர்ந்து அரசு சட்ட நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும் எனக் கூறி வருகிறார்.
இதையும் படியுங்கள்: அடத்தூ... பெற்ற மகளுக்கே தூரோகம்.. மருமகனுடன் மாமியார் உல்லாசம்... நள்ளிரவில் ஊர் எல்லையில் நடந்த பயங்கரம்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயில் குளத்தை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:- அகதீஸ்வரர் கோயில் குளம் தொடர்பாக வந்த செய்திகளின் அடிப்படையில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளோம், சென்னை மாநகராட்சி குளத்தை மேம்படுத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. அறநிலையத்துறையை பொருத்தவரையில் திருக்கோயிலில் உள்ள குளங்களை தூர்வாரி சீரமைக்க பணிகளை துரிதமாக செய்து வருகிறது. தற்போது செய்த ஆய்வில் இந்த குளத்தை திருக்கோயில் குளம் மகவே வடிவமைக்க முடிவு செய்துள்ளோம்.
இதையும் படியுங்கள்: Reliance retail தலைவராகிறார் இஷா அம்பானி: ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி: பொறுப்பை ஒப்படைத்தார் முகேஷ் அம்பானி
இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து பணிகள் துவங்கப்படும். இந்து சமய அறநிலைத்துறை தொடர்பாக நேற்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பார்த்தோம் அதை உள்வாங்கிக் கொண்டு பணிகளை வேகப்படுத்துவோம் என்றார். அதேபோல் சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடராஜர் கோவிலில் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அது குறித்து பல லட்சம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. புகார்களின் தன்மையை ஆராய்ந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலைத்துறை ஒவ்வொரு அடியையும் பார்த்து நிதானித்து, ஆராய்ந்து அறிந்து வைத்து வருகிறது என்றார்.