கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் புகார் மனுவை அளித்தனர்.
பிறகு அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர். அப்போது பேசிய அவர், கரூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தோடு, தொடர்ந்து அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க.. DMK Vs BJP : 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!
கரூரில் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது மட்டும் வழக்கு பதிந்த கரூர் மாவட்ட காவல்துறையினர், திமுகவினர் மீது வழக்குப் பதியவில்லை. நேற்று நள்ளிரவில் அதிமுக நிர்வாகி ஒருவரின் மகன் காவல்துறையினர் மூலமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கைது செய்த போலீசார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் ? யார் என்பது குறித்தும் ? கைது செய்யப்பட்ட நபர் இதுவரை எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதுகுறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்ட அவைத் தலைவர் திரு.வி.கவை கடத்திய நபர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இது வன்மையான கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இது போன்ற செயல்கள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பேசினார்.
இதையும் படிங்க.. Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!