அதிமுக ஓடுமா ஓடாதா அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்றெல்லாம் கேலி பேசினார்கள். ஆனால் 31ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை கொடுத்து, அதிக நாட்கள் மாநிலத்தை ஆண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்களை பேசினார். அப்போது பேசிய அவர், “அதிமுக வெற்றி மாநாடு மிகக்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்தியாவில் எழுச்சிமிக்க மாநாடாக அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக ஓடுமா ஓடாதா அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்றெல்லாம் கேலி பேசினார்கள்.
ஆனால் 31ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை கொடுத்து, அதிக நாட்கள் மாநிலத்தை ஆண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. ஜெயலலிதா எம்ஜிஆர் மதுரையை நேசித்தார்கள். அவர்கள் வாரிசான எடப்பாடி பழனிசாமியும் மதுரையை நேசிக்கிறார். அதிமுக மாநாட்டுக்கான பூமிபூஜை 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
1 கோடியே 65 லட்சம் பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் சேர பொதுமக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதிமுகவின் எழுச்சி தொண்டர்களின் உண்ர்ச்சியை தெரிந்து கொள்ளுகிற மாநாடாக அதிமுக மாநாடு இருக்கும். சித்திரைத் திருவிழா போல அதிமுக மதுரையில் கடலை மக்களை பார்த்ததில்லை. கடலை அனைத்து குடும்ப அட்டைக்கும் கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார்கள். எப்படி கொடுக்க போகிறார்கள் என தெரியவில்லை.
சொல்வது ஒன்று. செய்வது ஒன்றாக திமுக அரசு செய்து வருகிறது. பொய்யை சொல்லி விளம்பரம் மட்டுமே நோக்கமாக கொண்டு முதல்வரும், அரசும் செயல்படுகிறது. மக்களுக்கு தக்காளியே மறந்துபோகும் நிலை உள்ளது. ரசத்திலும் சாம்பாரிலும் தக்காளி போட முடியாத நிலை உள்ளது. பிடிஆரின் பதவி பறிக்கப்பட்டு எங்கோ மூலையில் உள்ளார். அவரை கண்டுபிடித்து தாருங்கள்.
பிச்சை என வாய்க்கொழுப்பாக அமைச்சர்கள் பேசுகிறார்கள். அதிமுகவின் உணர்வை புரிந்து கொண்டவர்கள் அதிமுகவில் உணர்வார்கள். அதிமுகவில் சாதி மத வித்தியாசம் இல்லை. இஸ்லாமியர் கூட அதிமுகவில் தலைமை தாங்குகிறார். திமுகவில் இதுபோல இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார் செல்லூர் ராஜு.
1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை - யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? முழு விபரம்