டிஐஜி விஜயகுமார் தற்கொலை: நியாயம் கிடைக்கணும்.? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

By Raghupati R  |  First Published Jul 7, 2023, 8:06 PM IST

இறந்து போனவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் நடக்காத விஷயம் இவர் தற்கொலை. அதுவும் கோவையில் நடந்துள்ளது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.


டி.ஐ.ஜி தற்கொலையில் தூண்டுதல் என்ன என்பதை விசாரிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் நடத்தப்பட வேண்டும் என்றும் கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். கோவை விமான நிலையத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை டி.ஐ.ஜி தற்கொலை தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “காவல்துறையில் அடிமட்டத்தில் மன அழுத்தம் உச்சகட்டமாக உள்ளது. இப்படி உயர் அதிகாரிகளின் அழுத்தம், அட்மினிஸ்ட்ரேஷன் அழுத்தம் என உள்ளது. காவல்துறையை சீரமைக்க வேண்டும். இதில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும். பத்தாயிரம் காலி பணியிடங்கள் தமிழகத்தில் உள்ளது. இதன்மூலம் பணி அழுத்தம் குறையும். முதல்வர் உயிரிழந்த டிஐஜிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால் போர்க்கால அடிப்படையில் 10,000 பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

Tap to resize

Latest Videos

 

சுப்ரீம் கோர்ட் 2006 இல் காவல்துறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். பணியிடங்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். பந்தோபஸ்தில் காவல்துறையினருக்கு சிறுநீர் கழிக்க கூட வசதி இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை கொடுக்க வேண்டும். காவல்துறையில் உள்ளவர்களுக்கு பிளாக் லீவு கொடுக்க வேண்டும்.

நான் 20 நாள் தான் நான் பணியில் இருந்த போது லீவு எடுத்துள்ளேன். நேர்மையான விஜயகுமாரின் செயல்பாடு மக்களை ஈர்த்துள்ளது. காவல்துறை நண்பர்களுக்கு பத்தாயிரம் கோடி நலத்திற்கு கொடுத்தால் என்ன தேய்ந்து போய்விடுமா.? தற்கொலையாக இருந்தாலும் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் இதை விசாரணை செய்ய வேண்டும். தொலைபேசி பேச்சு, அவர் வழக்கு மேற்பார்வை என்ன என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்.

மாநில அரசு இதை செய்வார்கள் என நம்புகிறேன். இறந்த குடும்பத்தின் வாரிசுக்கு குரூப் ஏ அரசு வேலை கொடுக்க வேண்டும். வாக்கிங் சென்றவர் ஹோம் ஆபீஸ் போய் பின்னர் தற்கொலை செய்தது ஆய்வு செய்ய வேண்டும். இறந்து போனவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் நடக்காத விஷயம் இவர் தற்கொலை. அதுவும் கோவையில் நடந்துள்ளது.
முறையாக விசாரிக்கப்பட வேண்டும். காவல்துறையில் மன அழுத்தம் உள்ளிட்ட எல்லா பிரிவையும் பார்க்க வேண்டும்.

காவல்துறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மக்கள் கொதித்துள்ளனர். குடும்பத்தின் தனி உரிமையை பாதிக்கப்படாதவாறு அதிகாரி பேச வேண்டும். இது குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மரணம் தொடர்பாக, முழுமையாக விசாரணை நடைபெறும் வரை தெரிவிக்க முடியாது. மனதார ஆத்மா சாந்தியடைய வேண்டும் என வேண்டுகிறேன். டி ஐ ஜி, ஐ ஜி ரேங்கில் என்ன மன அழுத்தம் இருக்கும். எனக்கு அனுபவம் உள்ளது” என்று பேசினார்.

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.. விதிமுறைகள் என்னென்ன?

ரூம் எடுக்க அதிக செலவா.? குறைந்த விலையில் ஹோட்டல் வசதி! IRCTC திட்டம் தெரியுமா உங்களுக்கு?

click me!