ரவீந்திரநாத்க்கும் எங்கள் கட்சிக்கும் சம்பந்தம் இல்லையென தெரிவித்த ஜெயக்குமார், நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ஓ.பி.ரவீந்தநாத்திற்கு மட்டும் ஜெயித்தால் போதும் என்று ஓ.பி.எஸ் நினைத்து பணத்தை வாரி வாரி செலவு செய்ததாக குற்றம்சாட்டினார்.
ஆளுநரிடம் திமுக புகார்
இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவராலும் தத்தா என்று அழைக்கப்படும் இரட்டை மலை சீனிவாசன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவது வாழ்ந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களிடையே காட்டப்படும் தீண்டாமையை உலகத்திற்கே தெரியப்படுத்தியவர். தீண்டாமையை ஒழிக்க குரல் கொடுத்தவர். உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்து இருக்கும் என தெரிவித்தார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக ஆளுனருக்கு எழுதிய கடிதம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
மக்கள் வரிப்பணம் வீண்
செந்தில் பாலஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை கூட செய்ய முடியாத நிலை உள்ளது. அமைச்சர் பதவி ஒரு பாதுகாப்பு கவசமாக அவருக்கு இருப்பதால் விசாரிக்க முடியாத நிலை இருப்பதாக கூறினார். சிறைக் கைதிக்கு எப்படி அமைச்சர் பதவிக் கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியவர், இலாகா இல்லாத அமைச்சர் என்றால் யாருடைய வரிப்பணம் அவருக்கு கொடுக்கப்படுகிறது என விமர்சித்தார். எனவே இந்த பிரச்சனையை திசை திருப்பவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகாரை திமுக கையில் எடுத்திருப்பதாக கூறினார். அதிமுகவிற்கு நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அரசியல் காழ்புணர்சிவோடு அனுப்பப்படும் புகார்களுக்கெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஆளுநர் கையெழுத்து போடுவாரா? என கூறினார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் தெரிவித்தார். பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டில் இருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது. பாஜகவுடனான தேர்தல் கூட்டணி தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது முடிவு எடுக்கப்படும் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்படது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், ரவீந்திரநாத்க்கும் எங்கள் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ஓ.பி.ரவீந்தநாத் மட்டும் ஜெயித்தால் போதும் என்று ஓ.பி.எஸ் நினைத்து பணத்தை வாரி வாரி செலவு செய்தார். தற்போது அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லையென கூறினார்.