வெள்ள நிவாரணம் டோக்கன் இன்று முதல் விநியோகம்! ரூ.6000 வழங்கப்படும் தேதி அறிவிப்பு! தொடங்கி வைக்கும் முதல்வர்!

By vinoth kumar  |  First Published Dec 14, 2023, 1:08 PM IST

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. 


மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை வரும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. மேலும் வீடுகளில் இருந்த முக்கிய பொருட்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தது.

Latest Videos

undefined

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவியானது தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது. அதன் படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதே போல மனித உயிரிழப்புகள், கால் நடை உயிரிழப்பு, வீடுகள் சேதம் உள்ளிட்டவைகளுக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பான டோக்கன் நியாய விலை கடைகளில் இன்று பிற்பகல் முதல் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில் டோக்கன்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரரின் பெயர், குடும்ப அட்டை எண் ஆகியவை இடம்பெற்றுள்ளன. டோக்கன் எண், மிக்ஜாம் புயல் நிவாரணம் வழங்கப்படும் நாள், நேரம் மற்றும் அலுவலரின் கையொப்பம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில் ரூ.6000 வெள்ள நிவாரண நிதியை டிசம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

click me!