பாராளுமன்றத்தையே காப்பாற்ற முடியவில்லை,.. மக்களை எப்படி காப்பாற்றுவார்கள்.? பாஜகவை விளாசிய ஜவாஹிருல்லா

By Ajmal Khan  |  First Published Dec 14, 2023, 12:52 PM IST

புதிய நாடாளுமன்ற கட்டிடம் மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் மத்திய அரசின் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டது. இத்தகைய அறிவிப்பெல்லாம் வெறும் வாய்சவடால்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 


மக்களவை மீது தாக்குதல்

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் 2001 ஆம் ஆண்டு இதே நாளில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி ஒன்றியத்தில் இருந்தபோது நாடாளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது என்றும், 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்திற்குள் மக்களவையில் மோடி தலைமையிலான ஆட்சியின் போது இன்று தாக்குதல் நடைபெற்றுள்ளது இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மக்களவையில் புகை குண்டு வீசியவர்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்.

Latest Videos

undefined

பாஜகவின் வாய்சவடால்

புகை கொண்டு வீசியவர்களை மக்களவைக்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு பரிந்துரையை கர்நாடக மாநில மைசூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பிரதாப் சிம்ஹா என்பவர் வழங்கியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பை மீறி  இந்த இருவரும் மக்களவைக்குள் நுழைந்திருப்பது மோடி ஆட்சியில் மக்களின் பாதுகாப்பை கேள்வி குறி ஆக்கியுள்ளது என்று தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஒன்றிய அரசின் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டது.

இத்தகைய அறிவிப்பெல்லாம் வெறும் வாய்சவடால்கள் என்பதை இன்றைய பயங்கர சம்பவம் எடுத்துக்காட்டி உள்ளது. நீட் தேர்வு எழுத போன மாணவர்களை பயங்கரவாதிகளை போல் பரிசோதிக்கும் போது புகை குண்டுகளை எடுத்து வந்த விஷமிகளை எப்படி அனுமதித்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் "மணிப்பூரில் வன்முறையை நிறுத்து" என முழக்கியதாகத் தகவல்

click me!