சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. மாநகராட்சி அறிவிப்பு.. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுகிறது.. மக்களே உஷார்.

Published : Nov 25, 2020, 11:06 AM IST
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. மாநகராட்சி அறிவிப்பு.. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுகிறது.. மக்களே உஷார்.

சுருக்கம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் இன்று (25-11-2020) 22 அடியை நெருங்குவதால் ஏரியிலிருந்து பொதுப்பணித்துறை  உபரி நீரை இன்று மதியம் 12 மணியளவில் ஆயிரம் கன அடி அளவிற்கு திறக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் இன்று (25-11-2020) 22 அடியை நெருங்குவதால் ஏரியிலிருந்து பொதுப்பணித்துறை  உபரி நீரை இன்று மதியம் 12 மணியளவில் ஆயிரம் கன அடி அளவிற்கு திறக்கப்படுகிறது. 

இது நீர் வரத்திற்கு ஏற்ப படிப்படியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பதால், ஆற்றின் இருமருங்கிலும் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள குறிப்பாக மண்டலம் 10, 11, 12 மற்றும் 13 இல் உள்ள கானு நகர், சூலை பள்ளம், திடீர்நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி யின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள் தற்போது திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 
கட்டுப்பாட்டு அறை எண்கள்: சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறை உதவி எண் 044-25384530 , 
044-25384540

தொலைபேசி எண்-1913,

மண்டலம் 10- 9445190210

மண்டலம்  11-9445190211

மண்டலம்  12-9445190212

மண்டலம்  13- 9445190213

 

 

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்