தாயுடன் வங்கிக்கு வந்த 13 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை... சிசிடீவி மூலம் பலே ஆசாமியை தேடும் போலீஸ்..!!

Published : Nov 25, 2020, 09:42 AM IST
தாயுடன் வங்கிக்கு வந்த 13 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை... சிசிடீவி மூலம் பலே ஆசாமியை தேடும் போலீஸ்..!!

சுருக்கம்

அப்போது அந்த மா்ம நபா்  13 வயது சிறுமியிடம் இருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை நூதன முறையில் ஏமாற்றி வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் வங்கிக்கு வந்த தேவி மகளிடம் பணம் இல்லாதாது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள கனரா வங்கியில் அடகு வைத்த நகையை திருப்ப தாயுடன் வந்த 13 வயது சிறுமியிடம்  2 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை நூதன முறையில் திருடிய நபா் குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சூரிய நாராயணன். இவா் ரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி தேவி (38). தேவி தனது 13வயது மகள் பிரியங்காவுடன்  சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கனரா வங்கியில் அடகு வைத்த நகையை திருப்புவதற்காக ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் கொண்டு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வட்டி குறைவாக வைத்து  நகையை  திருப்பி  தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

 

இதற்கு தனியாக ஸ்டாம்ப் வாங்கி வரவும் என கூறியுள்ளார். அதனைஅடுத்து பணத்தை தன்னுடைய மகளிடம் கொடுத்து விட்டு தேவி வங்கியை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த மா்ம நபா்  13 வயது சிறுமியிடம் இருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை நூதன முறையில் ஏமாற்றி வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் வங்கிக்கு வந்த தேவி மகளிடம் பணம் இல்லாதாது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

இதனை அடுத்து தேவி மகளிடம் இருந்த பணத்தை நூதன முறையில் ஏமாற்றி சென்ற நபா் மீது சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சாத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் வங்கியில் உள்ள  கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ  மற்றும் சாத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள வீடியோ பதிவுகளை வைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை சாத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!