காங்கிரஸ் கட்சியின் தூண் சரிந்தது..!! மோடி, ராகுல்காந்தி அதிர்ச்சி, இரங்கல்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 25, 2020, 9:01 AM IST
Highlights

தனது கூர்மையான அறிவுக்காக போற்றப்பட்டவர், அகமது பட்டேல் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவரது பங்கு அளப்பரியது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் மறைவுக்கு பிரதமர் மோடி, மற்றும் ராகுல் காந்தி  உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்பியும் மூத்த தலைவருமான அகமது பட்டேல் (71) கடந்த அக்டோபர் -1 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சில நாட்களில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் மீண்டும் கடந்த 14-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் துரதிஷ்டவசமாக இன்று அதிகாலை 3:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியதாவது:  பொதுச் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் அகமது பட்டோல், தனது கூர்மையான அறிவுக்காக போற்றப்பட்டவர், அகமது பட்டேல் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவரது பங்கு அளப்பரியது. அவரது மகனிடம் தொலைபேசியில் உரையாடி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கொண்டேன். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

அகமது பட்டேலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது:  இது ஒரு சோகமான நாள், அவர் காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார், சோதனையான காலகட்டங்களில் கூட காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயலாற்றினார். காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய சொத்தாக அகமது பட்டேல் விளங்கினார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார். 

இது குறுத்து தெரிவித்துள்ள பிரயங்கா காந்தி: அகமது படேல் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, எனக்கு எப்போதும் நல்ல ஆலோசனைகள் வழங்கக்கூடிய நண்பராக விளங்கினார். அவர் மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அதாவது அகமது பட்டேலின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பாதிப்பு மற்ற உறுப்புகளுக்கும் பரவியதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!