திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் குட்டிச் சுவராகி விடும்... கொதித்தெழுந்த எல்.முருகன்..!

Published : Nov 25, 2020, 10:43 AM IST
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் குட்டிச் சுவராகி விடும்... கொதித்தெழுந்த எல்.முருகன்..!

சுருக்கம்

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த, கருப்பர் கூட்ட தலைவர் செந்தில் வாசனை இயக்குவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த, கருப்பர் கூட்ட தலைவர் செந்தில் வாசனை இயக்குவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கரூரில் பேருந்து நிலையம் அருகே தடையை மீறி வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்சுட்டத்தில் பேசிய எல்.முருகன்;-  இந்து மதம், தமிழகத்துக்கு எதிராக உள்ள தீயசக்திகளை, அடையாளம் காணும் வகையில் தொடங்கப்பட்டுள்ள, வேல் யாத்திரைக்கு பொதுமக்கள், முருக பக்தர்கள் ஆதரவு உள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த, கருப்பர் கூட்ட தலைவர் செந்தில் வாசன், திமுக - ஐ.டி., பிரிவில் இருந்தவர். தற்போது, அவர்களுக்கு, திமுக தான் சட்ட ரீதியாக உதவிகளை செய்து வருகிறது. கருப்பர் கூட்டத்தை இயக்குவதே, திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலினும் தான். 

மேலும், திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிட்டால், தமிழகம் குட்டிச் சுவராகி விடும். பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், குரல் கொடுக்கும் கனிமொழி, தன் கட்சி எம்.எல்.ஏ., பூங்கோதை விஷயத்தில், மவுனம் சாதிப்பது ஏன்?  என கேள்வி எழுப்பினார். பின்னர் வேல்யாத்திரைக்கு முயன்ற பாஜகவின் தலைவர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!