பெத்த புள்ளைங்கள தவிக்கவிட்டு ஊரெல்லாம் 100 பிள்ளைகளாம். தூக்கி உள்ள போடுங்க.. கொதிக்கும் இந்து அமைப்புகள்.

By Ezhilarasan BabuFirst Published Dec 29, 2021, 10:53 AM IST
Highlights

புகாருக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரத் முன்னணி மாநில தலைவர் சிவாஜி, தனிமனித ஒழுக்கம் இன்றி வாழ்ந்து வந்த பெண் தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறி பொய் பரப்புரை நடத்தி மக்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. 

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி பரப்புரை செய்து வரும் போலிப் பெண்சாமியார், அருள்வாக்கு அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து சேவா சங்கம், பாரத் முன்னணி உள்ளிட்ட ஐந்து இந்து அமைப்புகள் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.இன்னொரு பெண்ணின் கணவருடன் குடும்பம் நடத்திய அன்னபூரணி திடீர் சாமியாராக உருவெடுத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் பேசு பொருளாகி உள்ள பெயர் அன்னபூரணி அரசு அம்மா. தன்னை ஆதிபராசக்தி என்றும் கூறி தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார் இவர். இறந்த கள்ளக்காதலனின் ஆவி தனக்குள் புகுந்துள்ளதாகவும் அதனால் அனைவருக்கும் அருள்வாக்கு சொல்லி வருவதாகவும், தனக்குள் அபரிதமான சக்தி மறைந்திருப்பதாகவும் பகீர் கிளப்பி வருகிறார் அன்னபூரணி அம்மா. செங்கல்பட்டில் எழுந்தருளி இருப்பதாக தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி, தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என்றும் அறிவித்துள்ளார். செங்கல்பட்டில் வரும் புத்தாண்டு 1 அன்று மக்களுக்கு அருள்வாக்கு வழங்கப் போவதாகவும் அறிவித்து, போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. பலரும் யாரிந்த அன்னபூரணி என கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்த கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு தனது எதிர்வீட்டில் வசித்த லட்சுமி என்ற பெண்ணிக் கணவர் அரசு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அதற்காக லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் பஞ்சாயத்துக்கு வந்தவர்தான் அன்னபூர்ணி.

கள்ளக்காதலுக்காக தான் கட்டிய கணவனையும், குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு எதிர் வீட்டு பெண்ணின் கணவர் அரசு என்பவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவர் தான் இந்த அன்னபூரணி. சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் நீ செய்வது தவறு, இன்னொரு பெண்ணின் கணவனுடன் தொடர்பில் இருப்பது தவறு என்று லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த அன்னபூர்ணிக்கு எவ்வளவோ படித்து படித்து சொல்லியும், முடியவே முடியாது வாழ்ந்தால் அரசுவுடன்தான் வாழ்வேன் என அடுத்தவரின் கணவனை ஆட்டயப்போட்டவர்தான் இந்த அன்னபூர்ணி. இப்படிப்பட்ட அன்னபூரணி திடீரென அம்மனாக அவதாரம் எடுத்துள்ளதாகவும், மக்களுக்கு அருள்வாக்கு கூறி வருவது போன்ற வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கள்ள கணவன் அரசுவுடன் இணைந்து செங்கல்பட்டில் சிறிய அளவில் மடம் ஒன்றை ஆரம்பித்துள்ள இவர். அடிக்கடி கல்யாண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து பக்தர்களுக்கு அருள்வாக்கும் வழங்கி வருகிறார். அவரை தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து அருள்வாக்கு வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் எல்லா மூலைகளில் இருந்தும் மக்கள் அன்னபூரணியை தேடி வருகின்றனர். பல தீராத நோய்களுடன் வந்து அன்னபூரணியிடம் அருள்வாக்கு பெற்றுச் செல்கின்றனர், அப்படி அருள் வாக்கு பெற்றதால் தீராத நோய்களெல்லாம் இருந்ததாகவும் பக்தர்கள் கூறிவருகின்றனர். 

சொல்வதெல்லாம் பஞ்சாயத்தை அறிந்த பலரும், இது போன்ற போலி சாமியார்களை உடனே தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்த கோரிக்கையின் எதிரொலியாக அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் பலரும் அன்னபூரணியை கைது செய்ய வேண்டுமென சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது கள்ளக்காதலனுடன்தான் வாழ்வேன் என்று அவர் கூறிய வீடியோவை மேற்கோள்காட்டி மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் போலி சாமியாராக வலம் வரும் இந்த அன்னபூரணியை தமிழக காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும் என ஐந்துக்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக இந்து சேவா சங்கம், பாரத் முன்னணி உள்ளிட்ட 5 அமைப்புகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் போலி சாமியாராக வலம் வந்து தன்னை கடவுளின் அவதாரம் என கூறி இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் பெண்ணை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த புகாருக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரத் முன்னணி மாநில தலைவர் சிவாஜி, தனிமனித ஒழுக்கம் இன்றி வாழ்ந்து வந்த பெண் தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறி பொய் பரப்புரை நடத்தி மக்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. ஒருவர் தன்னை சாமியார் என்று கூறிக் கொள்வதை நாங்கள் குறை சொல்லவில்லை, ஆனால் கடவுளின் அவதாரம் என்று கூறிவதை நாங்கள் எதிர்க்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கடவுளின் பெயரால் மூளைச்சலவை செய்து ஏமாற்றும் அன்னபூரணி அரசு அம்மா மீது, மத நம்பிக்கைகளை இழிவு படுத்துதல், இரு பிரிவினரிடையே மோதல் தூண்டுதல், மதத்தின் பெயரால் குற்றச்செயல் புரிதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் சமூக வலைதளத்தில் பலரும் பெற்ற பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய அன்னபூரணி ஊரெல்லாம் தனக்கு நூறு பிள்ளைகள் என்று கூறுகிறார். இந்த அருள் வாக்கு அன்னபூரணியை சும்மா விடக்கூடாது என்று பலரும் சமூக வலைத்தளத்திலும் கண்டித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

 

click me!