AIADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைகிறாரா? பரபரப்பு தகவல்கள்..!

Published : Dec 29, 2021, 10:29 AM IST
AIADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைகிறாரா? பரபரப்பு தகவல்கள்..!

சுருக்கம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தது முதலே அங்கு மாவட்டச் செயலாளர், அமைச்சராக இருந்த வீரமணி மற்றும் நிலோபர் கபில் இடையே மோதல் இருந்து வந்தது. வீரமணி ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல பெயர் காரணமாக அடுத்தடுத்து பதவிகளை பெற்று மேலே வந்தவர். ஆனால் நிலோஃபர் கபில் அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர்.

அதிமுகவில் இருந்து நீக்கட்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் விரைவில் தனது ஆதரவாளர்களின் படை சூழ திமுகவில் இணை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. ஆனால், முதல்வரின் உத்தரவுக்காக நிலோபர் கபில் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தது முதலே அங்கு மாவட்டச் செயலாளர், அமைச்சராக இருந்த வீரமணி மற்றும் நிலோபர் கபில் இடையே மோதல் இருந்து வந்தது. வீரமணி ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல பெயர் காரணமாக அடுத்தடுத்து பதவிகளை பெற்று மேலே வந்தவர். ஆனால் நிலோபர் கபில் அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர். ஜெயலலிதாவிற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கொடுத்த போது கையில் உருட்டுக்கட்டையுடன் சாலையில் இறங்கி கடைகளை மூட வைத்து அதிர வைத்தவர் நிலோபர் கபில்.

நிலோபர் கபில் கையில் உருட்டுக்கட்டையுடன் சாலையில் வலம் வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதிமுக மேலிடத்தாலும் கவனிக்கப்பட்டவர் ஆனார். அப்போது வாணியம்பாடி நகர்மன்ற தலைவராக இருந்த நிலோபர் கபிலுக்கு 2016 தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். வெற்றி பெற்று வந்த அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. வாணியம்பாடி மட்டும் அல்லாமல் வேலூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இடையே நிலோபருக்கு நல்ல பெயர் இருந்த காரணத்தினால் கட்சியில் வேகவேகமா அவரால் வளர முடிந்தது.

இதனிடையே நிலோபரின் வளர்ச்சி அருகாமை தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான வீரமணிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் நிலோபரை கட்சியில் மேலும் வளரவிடாமல் அவர் பார்த்துக கொண்டார். இதற்கிடையே திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகும் கூட கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவியை நிலோபரால் பெற முடியவில்லை. அத்தோடு தேர்தலில் போட்டியிடவும் நிலோபருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்போது முதலே இனி அதிமுக இருந்தார் சரிவராது என்கிற முடிவை நிலோபர் எடுத்துவிட்டார்.

இந்நிலையில், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக சமீபத்தில் அதிமுகவில் இருந்து நிலோபர் கபில் அதிரடியாக நீக்கப்பட்டார். நிலோபர் கபில் மீது தற்போது 6 கோடி ரூபாய் மோசடி புகார் உள்ளது. எனவே அவரை திமுக ஏற்றுக் கொள்ளுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே நிலோபர் கபில் திமுக இணையும் நிகழ்வு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.  அறிவாலய வாசல் திறப்புகாக காத்திருக்கும்  முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், தன்னுடன் குறைந்தது 5,000 பேரையாவது திமுகவுக்கு அழைத்துச்செல்ல முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!