சென்னை தலைமை செயலகத்தில் பயங்கரம்.. மரம் விழுந்து பெண் காவலர் துடி துடித்து உயிரிழப்பு.. காவலர்கள் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2021, 10:48 AM IST
Highlights

கனமழை காரணமாக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த பிரமாண்டமாக மரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மழை காரணமாக  மரம் வேரோடு சாய்ந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பெண் காவலர் கவிதா (41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் காவலர் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவரது உடல் மீட்க்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கிய தீவிரமாக பெய்து வருகிறது, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், அடுத்த ஒரு வாரத்திற்கு  பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கை கடற் பகுதியை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்றும் அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும் இதன் காரணமாக 

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் தலைமையில் திடீர் ஆலோசனை... அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு.. 5 மாவட்டங்களில் முக்கிய முடிவு.

 01.11.2021, 2.11.2021 (ஆரஞ்சு எச்சரிக்கை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் நேற்று  மாலை முதலே தொடங்கி இரவு முழுவதும்  மழை விட்டு விட்டு  பெய்து வந்தது. தேனாம்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், பட்டினபாக்கம் மந்தைவெளி அடையாறு, மயிலாப்பூர்,கிண்டி,உள்ளிட்ட  சென்னையின் பெரும்பாலான  பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்தது.  அதேபோல் கோவை மாவட்டம் சூலூரில் பெய்த கனமழையால் அங்குள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது,  இதனால் வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கிறது, இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாலையிலேயே  வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பருவ மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர்  சூழ்ந்துள்ளன. அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தை சேர்ந்த முதியவர் அர்ஜுனன் தனது வீட்டின் முன்பு தேங்கிய தண்ணீரை அகற்றிய போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்: 3 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்.. ஸ்மாட் போன் இலவசம்.. பெண்களை குறிவைத்த பிரயங்கா காந்தி. அலறும் யோகி.

அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது இந்நிலையில் சென்னையில்  இரவு முழுவதும் விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.  கனமழை காரணமாக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த பிரமாண்டமாக மரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  உடனே அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கவிதாவை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கவிதாவின் உடலை மீட்டனர், மரம் சாய்ந்து பெண் காவலர் உயர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!