அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை? ஓபிஎஸ் கூறிய பதில் என்ன தெரியுமா?

By vinoth kumarFirst Published Nov 2, 2021, 9:42 AM IST
Highlights

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக தலைமைக்கழக நிர்வாகிகளுடன் கூடி பேசி முடிவு எடுப்போம் என்றார். மேலும், சசிகலா பற்றி அவதூறாக பேசிய எடப்பாடி பழனிசாமிக்கும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருத்து கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில்  விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

ஆளும் திமுக அரசு மீது ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்ததையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்  போது சசிகலாவை கடுமையாக விமர்சித்தார். சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பேட்டி அளித்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக தலைமைக்கழக நிர்வாகிகளுடன் கூடி பேசி முடிவு எடுப்போம் என்றார். மேலும், சசிகலா பற்றி அவதூறாக பேசிய எடப்பாடி பழனிசாமிக்கும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருத்து கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதையும் படிங்க;- அதிமுக சுக்குநூறாய் தகர்ந்துவிடும்... எடப்பாடி -சசிகலாவுக்கு ஜெ. உதவியாளர் எச்சரிக்கை..!

இந்நிலையில், மதுரையில் நேற்று மாலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மாவட்ட செயலர்கள் விவி.ராஜன் செல்லப்பா (மதுரை புறநகர் கிழக்கு), பிஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), எம்.ஏ.முனியசாமி (ராமநாதபுரம்) மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்ற அவசர ஆலோனை நடைபெற்றதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. சசிகலா அதிமுகவில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனை என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் மீட்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை உரிமையை திமுக அரசு பறிகொடுத்துள்ளதாகவும் அதை மீட்டெடுக்க அதிமுக தொடர் போராட்டங்களை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

இதையும் படிங்க;- வீர வசனம் பேசிவிட்டு நீங்களே இப்படி செய்யலாமா? டிடிவி கேட்ட ஒரே கேள்வி.. திக்குமுக்காடிய திமுக..!

இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்;- ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தி 136 அடியிலிருந்து முதல்கட்டமாக 142 அடியாக உயர்த்த உத்தரவு பெற்றுத் தந்தார். அதன் தொடர்ச்சியாக அந்த ஆண்டே முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 3 முறை நீர்மட்டத்தை நிலை நிறுத்தியது அதிமுக ஆட்சி. ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. 

இதையும் படிங்க;-ஆடிட்டர் குருமூர்த்தி மீதான புகார்.. ஆறப்போட்ட அதிமுக.. அதிரடி காட்டிய திமுக..!

தமிழக அரசு 142 அடியை தேக்குவதற்கு இன்றைக்கு பல்வேறு இடையூறுகளை கேரள அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் கண்டும் காணாமல் இருப்பது போல் தமிழக அரசின் நிலைப்பாடு உள்ளது. இதை தமிழக மக்களுக்கு நினைவுப்படுத்தவும் 5 மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை உறுதிப்படுத்துவதற்கும், அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் 5 மாவட்டங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியுடன் கலந்து பேசி அதற்குரிய தேதி, இடம், பங்கேற்போர் குறித்து அறிவிக்கப்படும். மேலும், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்காமலேயே சென்றுவிட்டார்.

click me!