3 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்.. ஸ்மாட் போன் இலவசம்.. பெண்களை குறிவைத்த பிரயங்கா காந்தி. அலறும் யோகி.

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2021, 9:54 AM IST
Highlights

பெண்களுக்கு என காங்கிரஸ் கட்சி தனி தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்துள்ளது என தெரிவித்துள்ளதுடன், எனது அருமை சகோதரிகளே உங்களுடைய ஒவ்வொரு நாளும் போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது.

உத்திரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள பிரியங்கா காந்தி பெண்களை குறிவைத்து தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறார். உத்திரப்பிரதேசத்தில் ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், மாணவிகளுக்கு ஸ்கூட்டி உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அம்மாநில பெண்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. தேசிய அளவில் நேர்-எதிர் கட்சியாக பாஜக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக நாட்டை பாஜக ஆண்டு வருகிறது. இதில் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் காங்கிரஸால் பாஜகவை வீழ்த்த முடியவில்லை, இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை கீழ்மட்ட அளவில் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் கட்சி தலைமை ஈடுபட்டுவருகிறது. 

இதையும் படியுங்கள்: சென்னை தலைமை செயலகத்தில் பயங்கரம்.. மரம் விழுந்து பெண் காவலர் துடி துடித்து உயிரிழப்பு.. காவலர்கள் அதிர்ச்சி.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதில் அக்கட்சியில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வருவதால், கட்சித் தொண்டர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க  நாட்டின் பிரதமரையே தீர்மானிக்கும் பலம் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக- காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் அம்மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இப்போதே அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அம்மாநில பெண்களை குறிவைத்து காங்கிரஸ் தலைமை வியூகம் வகுத்து வருகிறது. இதனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் பிரியங்கா காந்தி.

அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும்  சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் ஐந்து அரசு பணிகளில் 2 அரசுப் பணிகள் பெண்களுக்கு வழங்கப்படும் அவர் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் 40 சதவீதம் பெண்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை முடிவு செய்வதில் குழப்பம் இருந்தாலும் உ.பியை பொறுத்த வரையில் காங்கிரஸ் முகமாக பிரியங்கா தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் குறியாக இருந்து வருகிறார்.  உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு பிடித்த தலைவராக பிரியங்காவையே  பார்க்கின்றனர். எனவே பெண்களை மையமாக வைத்தே அவரது அனைத்து அறிவிப்புகளும் இருந்து வருகிறது. பல கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை தயாரிப்பதற்கு  முன்பாகவே பிரியங்கா பெண்களைக் குறி வைத்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. 

இதையும் படியுங்கள்: 40 வருஷ அரசியலில் விழுந்த இடி.. துடி துடிக்கும் ராமதாஸ்.. விட மாட்டோம் என கதறிய பாமக பாலு..

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்திரபிரதேச பெண்களுக்கு என காங்கிரஸ் கட்சி தனி தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்துள்ளது என தெரிவித்துள்ளதுடன், எனது அருமை சகோதரிகளே உங்களுடைய ஒவ்வொரு நாளும் போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி அதை புரிந்துகொண்டு பெண்களுக்கான பிரத்தியேக தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. உ.பியில் காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும், அரசுப் பேருந்துகளில் பெண்கள் டிக்கெட் வாங்க தேவையில்லை இலவசமாக பயணிக்கலாம், பெண் மாணவர்களுக்கு ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் அறிவிப்புச் செய்துள்ளார். பல கட்சிகள் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவோம் என கூறிவரும் நிலையில் ஸ்கூட்டி வழங்குவோம் என பிரியங்க காந்தி அறிவித்துள்ளது பன்மடங்கு பாய்ச்சலாக கருதப்படுகிறது.

இதனால் பாஜக, சமாஸ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பெரும் கலக்கமடைந்துள்ளனர். மேலும் அனைத்து ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதாந்தோறும் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் , விதவைப் பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ஓய்வூதியம் மற்றும் மாநிலம் முழுவதும் 75 சதவீத தொழிற்கல்வி பள்ளிகளை உருவாக்குவோம் என்றும் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு உத்தரபிரதேச மாநில பெண்களை வெகுவாக கவர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

click me!