ஓட்டுனர் இல்லாததால் ரோந்து வாகனத்தை இயக்கிய பெண் ஆய்வாளர்.. கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்து.?

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2021, 1:23 PM IST
Highlights

தன்னால் எந்த விபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என பயந்து ஆய்வாளர்  வாகனத்தை முழுமையாக திருப்ப முற்பட்டதால் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோவில் வாகனம் மோதியது விசாரணையில் தெரியவந்துள்ளது.  

பணி நேரத்தில் பெண் ஆய்வாளர் இயக்கிய ரோந்து வாகன கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ரோந்து  வாகனமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவத்தால் கீழ்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நியூ ஆவடி ரோடு அருகே அமைந்துள்ள கீழ்ப்பாக்கம் தோட்டம் காலனி அருகே ரோந்து பணியை முடித்துவிட்டு காவல் ஆய்வாளர் அம்பிகா காவல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியது. அப்போது அதில் இருந்த இருவர் பலத்த காயங்களுடன் படுகாயமடைந்தனர். ரோந்து வாகனம் மோதியதில்  இரண்டு வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. 

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ஆவடி செல்வதற்கு பிரதானமாக சாலையாக உள்ளது நியூ ஆவடி சாலை, இந்தச் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த அம்மா ரோந்து வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. அதில் இருவர் படுகாயமடைந்தார்.மேலும் சாலையில் நின்றிருந்த  இரு வாகனங்கள் சேதம் அடைந்தது. சம்பவம் குறித்து விசாரித்ததில், ரோந்து வாகனத்தை இயக்க உரிய ஓட்டுனர் இல்லாததால், அதை பெண் காவல் ஆய்வாளர் அம்பிகாவே இயக்கியது தெரியவந்தது. அதுவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. 

நியூ ஆவடி ரோடு வழியாக காவல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அப்போது ஆய்வாளர் வாகனத்தை வளதுபுறம் திருப்ப முயன்றுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. தன்னால் எந்த விபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என பயந்து ஆய்வாளர்  வாகனத்தை முழுமையாக திருப்ப முற்பட்டதால் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோவில் வாகனம் மோதியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த இருவர் தலையில் பலத்தகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர. இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!