தலைமைச் செயலகத்தில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு. அரசு உத்தரவு

Published : May 26, 2021, 10:53 AM ISTUpdated : May 26, 2021, 10:54 AM IST
தலைமைச் செயலகத்தில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு. அரசு உத்தரவு

சுருக்கம்

தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இணை நோயுள்ள பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டுமென தலைமைச் செயலக துறை செயலாளர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இணை நோயுள்ள பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டுமென தலைமைச் செயலக துறை செயலாளர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

covid-19 தொற்று மாநிலமெங்கும் அதி தீவிரமாக பரவி வரும் வேலையில், தமிழகத்தில் உள்ள அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள் மட்டும் செயல்படும் என அரசாணை நிலை எண் 386 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நாள் 22-5-2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகளை பொருத்தவரை ஊரடங்கு காலம் முடியும் வரை, துறை செயலாளர்கள் அளவிலேயே பின்வரும் குறிப்புகளை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து முடிவு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும், இணை நோயுள்ள பணியாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும், நோயைத் தடுப்பதற்கு உரிய முறையான வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!