அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது போன்ற தவறுகளை திமுக அரசு செய்யக்கூடாது.. மருத்துவர்கள் சங்கம் அதிரடி.

Published : May 26, 2021, 10:01 AM ISTUpdated : May 26, 2021, 10:02 AM IST
அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது போன்ற தவறுகளை திமுக அரசு செய்யக்கூடாது.. மருத்துவர்கள் சங்கம் அதிரடி.

சுருக்கம்

மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் மருத்துவர்களின் பெயர்களை இணைக்காமல் கவுன்சிலிங்கை நேற்றைய தினம் தொடங்கியது சரியல்ல. எனவே, மகப்பேறு மருத்துவர்களின் பணிமூப்பு அடிப்படையில் அவர்களுக்கு பணி இடங்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

முதுநிலை மருத்துவம் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கான மறு பணி (Posting ) வழங்கல் கவுன்சிலிங் நேற்று முதல்  ஆன்லைன் முறையில் நடை பெற்று வருகிறது. இது மிகவும் வரவேற்புக்குரியது. என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் : கடந்த ஆட்சிக் காலத்தில் கவுன்சிலிங் நடத்தப்படாமலேயே, நேரடியாக
பணி இடம் வழங்கல் உத்தரவுகள் வழங்கப்பட்டன. 

அதிலும் ஊழலும் முறைகேடுகளும் நடைபெற்றன. அதை எதிர்த்தும், கவுன்சிலிங் நடத்தி மறு பணி நியமனம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும், ஒவ்வொரு முறையும் கவுன்சிலிங் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியே, அரசு மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்றது. எம்.ஆர்.பி மூலம் தேர்வு செய்யப் பட்ட மருத்துவர்களுக்கும் கூட ,கவுனசிலிங்கை நடத்தாமல் ,நேரடியாக பணிநியமன ஆணைகள் வழங்கப் பட்டன. இதுவும் ஊழல் முறை கேடுகளுக்கும்,பல்வேறு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் வழி வகுத்தன. இந்நிலையில் ஆன்லைன் மூலம் தற்பொழுது கவுன்சிலிங்கை நடத்துவது மனமாறப் பாராட்டத்தக்கது.

ஆயினும், இந்த கவுன்சிலிங்கில் ,மகப்பேறு விடுப்பெடுத்த 15 க்கும் மேற்பட்ட பெண் மருத்துவர்கள் அனுமதிக்கப்
படவில்லை. அவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. இது பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது.இக் குறைபாட்டைப் போக்கிட உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் மருத்துவர்களின் பெயர்களை இணைக்காமல் கவுன்சிலிங்கை நேற்றைய தினம் தொடங்கியது சரியல்ல. எனவே, மகப்பேறு மருத்துவர்களின் பணிமூப்பு அடிப்படையில் அவர்களுக்கு பணி இடங்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். 

பல துறைகளில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை வெளிப்படையாக காட்டாமலேயே, கவுன்சிலிங் நடைபெறுவதாக,பல மருத்துவர்
களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன.எனவே, மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் மருத்துவர்களின் நலன் பாதுகாக்கப் படும் வகையிலும், அனைத்து காலிப் பணியிடங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்தும் கவுன்சிலிங்கை நடத்திட வேண்டும். கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது போன்ற தவறுகளை புதிய திமுக அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு