
நானும், ஓபிஎஸ்ம் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இணைந்தே செயல்பட்டு வருகிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது எல்லாம், சும்மா என ஓபிஎஸ் ஆதரவாளர்கள குற்றம்சாட்டி வரும் நிலையில் ஓபிஎஸ்ன் செயல்களை எடப்பாடி பழனிசாமியும் ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்பு இணைந்தாலுமே கூட இருவருக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் இருந்து கொண்டேதான் இருப்பதாக தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
கடந்த வாரம் தேனியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பனிப்போர் வெட்ட வெளிச்சத்திற்கு வந்ததை அனைவருமே உணர்ந்தனர்.
கூட்டத்தில் திடீரென எழுந்த ஒரு கூட்டம் ‘ஒன்று வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்க...’ என கூச்சலிட்டது.
மேலும் விழாவில் ஓபிஎஸ் பேசி முடித்ததும் அவரது ஆதரவாளர்கள் எழுந்து கிளம்ப ஆரம்பித்துவிட்டனர். பன்னீருக்கு சொந்த மாவட்டமான தேனியில் தனது செல்வாக்கை காட்டுவதற்காகத்தான் இது போன்ற வேலையைப் பன்னீரும் அவரது ஆதரவாளர்களும் செய்தார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு நினைக்கிறது.
இந்த சம்பவத்தால் நொந்து போன இபிஎஸ் பேசும்போது, ‘நானும் பன்னீரும் இரட்டைக் குழல் துப்பாக்கிபோல இணைந்தே செயல்பட்டுவருகிறோம்’என்று சொன்னார்.
ஆனாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதை கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது. சும்மா பேருக்காக அண்ணனை நிதி அமைச்சர் ஆக்கிட்டு எல்லாவேலைகளும்ஜெயக்குமாரே பார்த்துட்டு இருக்காரு. அவரைத் திட்டமிட்டே எடப்பாடி புறக்கணிக்கிறாரு என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடமாக நம்புகின்றனர்.
மேலும் தாங்கள் இருவரும் ரெட்டைக் குழல் துப்பாக்கின்னு சொன்னதெல்லாம் வெறும் வேஷம்...’ என்று புலம்புகிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்.
இதே போல் நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலும், பன்னீர் பேசி முடித்ததும் ஒரு கூட்டம்தானாக விழாத் திடலிலிருந்து வெளியே போனது.இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் இதையெல்லாம் சொல்லிப் புலம்பியிருக்கிறார்.
நம்ம மேடையில் இருக்கும்போதே வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்கன்னு கோஷம் போடுவாங்க… இதைப்பார்த்து ஒபிஎஸ்ம் ரசித்து சிரிப்பாரு என கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, அவரு சொல்லித்தான் இப்படி கூச்சலிட்டு என்னை அவமானப்படுத்தியிருக்கிறார்கள், என தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார்.
இதனால எனக்கு என்ன நஷ்டம் வரப் போகுது. அண்ணன் எப்போசாவான் திண்ணை எப்போ காலி ஆகும்னு எங்க ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அவருஅப்படித்தான் நினைக்கிறாரு போல இருக்கு!’என்று புலம்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.