காய்கறி விற்பனையில் முறைகேடா? என அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு!

Asianet News Tamil  
Published : Nov 15, 2017, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
காய்கறி விற்பனையில் முறைகேடா? என அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு!

சுருக்கம்

Minister Sellur Raju examined

விலைவாசிகளைக் குறைப்பதே பசுமை பண்ணைக் கடைகளின் நோக்கம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

பசுமை பண்ணைக் கடைகளில் காய்கறி கடைகளில் விற்பனையில் முறைகேடு நடக்கிறதா என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சென்னை, திருவல்லிக்கேணியில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், விலைவாசிகளைக் குறைப்பதே பசுமை பண்ணைக் கடைகளின் நோக்கம் என்று கூறினர். வெங்காயத்தை ஒரு வாரகாலத்துக்குமேல் பதுக்க முடியாது என்றும், ரேஷன் கடைக்கு வாங்கப்படும் பொருட்கள் உணவுத் துறையால் வாங்கப்படுவதாகவும் கூறினார்.

பொதுமக்களின் தேவைக்கேற்ப காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், விலைவாசிகளை குறைப்பதே பசுமை பண்ணைக் கடைகளின் நோக்கம் என்றார்.

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க நுகர்வோரிடம் திணிக்கப்படுவதில்லை என்றும், பருப்பு விருப்பப்பட்டு வாங்குபவர்களுக்கு 30 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!