'காய்ச்சலில் 29 வகைகள் உள்ளன’.. பகீர் கிளப்பும் செல்லூர் ராஜு!

Asianet News Tamil  
Published : Nov 15, 2017, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
'காய்ச்சலில் 29 வகைகள் உள்ளன’.. பகீர் கிளப்பும் செல்லூர் ராஜு!

சுருக்கம்

Sellur Raju explain about fever

டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், பன்றி காய்ச்சல், வைரல் காய்ச்சல்  என  ‘தற்போது  காய்ச்சலில்  29  வகைகள்  உள்ளன’ என்று  பேசி அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோல் ஷீட் மிதக்கவிட்டது, சசிகலா இல்லைனா இந்த ஆட்சி இருந்திருக்காது என பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருபவர் அமைச்சர் செலலூர் ராஜு. தற்போது தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சல் குறித்தும் பேசி புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பரவி வரும் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில்  ) சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டை நேதாஜி நகர்ப்பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளைக் அமைச்சர் செல்லூர் ராஜு,முன்னாள் அமைச்சர் மதுசூதனன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வெள்ள நிவாரணம் மற்றும்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும்  எந்த வேலையும் நடக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருவதாக குறிப்பிட்டார்.

மழை கொஞ்சம் நின்னால்  சீரமைப்புப் பணிகளை வேகமாக முடித்து விடுவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில்  மட்டும்தானா டெங்கு காய்ச்சல் இருக்கு ? இந்தியா முழுவதும்தான் இந்த காய்ச்சல் இருக்கு என கூறினார்.

இந்தியாவில் டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என 29 வகையான காய்ச்சல் இருப்பதாகவும், ஆனால் எந்தக் காய்ச்சல் வந்தாலும் அது டெங்கு காய்ச்சல்தான் என தமிழ்நாட்டில் கூறிவிடுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

சென்னையில்  கடந்த 10 நாட்களாக இவ்வளவு மழை பெய்தும் எந்த இடத்திலும் நோய்த்தொற்று இல்லை. அந்தளவுக்கு நாங்கள் வேலை தீயாக வேலை செய்திருக்கிறோம் எனவும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

TVK VIJAY MOVE: ஆளுநர் மூலம் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி.! விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் எதிர்க்கட்சிகள்.! இதுதான் தமிழகம்.!
TVK Vijay: த.வெ.க ஆட்சி அமைக்க தி.மு.க இடையூறு செய்யாது - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்