
இரண்டாயிரம் தொண்டர்களுடன் பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி.
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அ.திமு.க புரட்சி தலைவி அம்மா அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று அமைச்சர் பரஞ்ஜோதி ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது அணியில் இணைந்தார். 2 ஆயிரம் பேருடன் இன்று ஓ.பி.எஸ் அணியில் பரஞ்ஜோதி தன்னை இணைத்து கொண்டார்.
செல்வாக்கு மிக்க அமைச்சராக வலம் வந்த பரஞ்சோதி கடந்த அ.தி.மு.க ஆட்சியின் தொடக்கத்தில் முன்னணி அமைச்சராக இருந்தவர் பரஞ்ஜோதி. திருச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்த இவர், முதலில் ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்து திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நேருவை தோற்கடித்த பரஞ்ஜோதிக்கு 7 துறைகள் வழங்கினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. பெண் மருத்துவர் ராணி என்பவர் கொடுத்த பாலியல் புகாரால் அனைத்து பதவிகளையும் இழந்தார் எனபது குறிப்பிட தக்கது.