தருமபுரியில் அண்ணாமலை என்ன? பிரதமர் மோடியே போட்டியிட்டாலும் வெல்ல முடியாது... சவால் விடுக்கும் திமுக எம்.பி.!!

By Narendran SFirst Published Jan 4, 2023, 12:03 AM IST
Highlights

தருமபுரியில் பிரதமர் மோடியே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என திமுக எம்.பி. செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார். 

தருமபுரியில் பிரதமர் மோடியே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என தருமபுரி எம்.பி. செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தருமபுரியில் 14 வார்டுகளில் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளது. ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அந்த கட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து தான் நிர்ணயிக்கப்படும்.

இதையும் படிங்க: 4ம் தேதி வரும் ரிசல்ட்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! அதிமுக தலைமை இவருதான் - பரபரக்கும் அதிமுக வட்டாரம்

அந்த வகையில் அண்ணாமலை தலைமையேற்ற பிறகு பாஜக தருமபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்து, டெபாசிட் இழந்துள்ளது. பாஜகவிற்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக செய்தி வழியாக தெரிந்து கொண்டேன். இதை வரவேற்கிறேன்.

இதையும் படிங்க: 1 நாள் அவகாசம்.. திருத்தி கொள்ளுங்க, இல்லை.! சுமந்த் சி ராமனுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் பி.டி.ஆர்

பாஜக தலைவர் அண்ணாமலை தருமபுரியில் வந்து போட்டியிடட்டும். திமுக வேட்பாளர் யாராக இருந்தாலும், பாஜகவை எளிமையாக தோற்கடிப்போம். மேலும் ஒரு சவால் விடுக்கிறேன். பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, தருமபுரி தொகுதியில் போட்டியிட்டாலும் சரி,  அவரை திமுக தோற்கடிக்கும் என்பதை சவாலாக சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!