அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்! EPS தரப்புக்கு அனுமதி.. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.!

By vinoth kumarFirst Published Feb 8, 2023, 10:58 AM IST
Highlights

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது.  இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தங்கள் கட்சி சார்பாக தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என 100க்கும்  மேற்பட்டவர்கள் கொண்ட  பட்டியல்களை அதிமுக மற்றும் திமுகவினர் வெளியிட்டுள்ளனர். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை இருதரப்பு வழங்கிய நிலையில் இபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது.  இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தங்கள் கட்சி சார்பாக தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என 100க்கும்  மேற்பட்டவர்கள் கொண்ட  பட்டியல்களை அதிமுக மற்றும் திமுகவினர் வெளியிட்டுள்ளனர். இதனால், தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அதிமுகவில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை ஓபிஎஸ், இபிஎஸ் என இருதரப்பிலும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓபிஎஸ் தரப்புக்கு மறுப்பு தெரிவித்து, இபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில்  எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தமிழ் மகன் உசேன், முனுசாமி உள்ளிட்ட 40 பேர் பட்டியல் இடம்பெற்றுள்ளனர்.

click me!