நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடி அளவிற்கு சொத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை குறைத்து காட்டியதாக மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரமாண பத்திரத்தில் சொத்து விவகாரங்களை குறைத்து காட்டியதாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடி அளவிற்கு சொத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை குறைத்து காட்டியதாக தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிங்க;- செம்மலை மேல்முறையீடு.. என் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது.. சசிகலா கேவியட் மனு.!
இந்த வழக்கு சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தத போது சட்டமன்ற தேர்தல் வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க;- பாஜக நிர்வாகிகளை அண்ணாமலை கண்டிக்கனும்.!இல்லைனா எங்களுக்கும் எதிர்வினையாற்ற தெரியும் எச்சரிக்கும் ஜெயக்குமார்