ஓபிஎஸ் நாகரிகம் அறிந்து பேச வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஓபிஎஸ் நாகரிகம் அறிந்து பேச வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக திருச்சி மாநாட்டில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அரசியலில் நாகரிகம் வேண்டும். பண்பாடு வேண்டும். யாராவது வந்து எங்கள் மீது கல்லை வீசினால்தான் நாங்கள் எதிர்த்து கல் வீசுவோம்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு ஆதரவாக பரப்புரையா? கமல்ஹாசன் சொல்வது என்ன?
ஆளுங்கட்சியாக இருக்கும் போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், நானும் சரி என் கட்சியும் சரி, யார் விமர்சனை வைக்கிறார்களோ அவர்கள் மீது விமர்சனம் வைப்போம். ஒரு முதலமைச்சராக இருந்தவர், தமிழ்நாட்டில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஓபிஎஸ். நாகரிகம் அறிந்து பேச வேண்டும். கூலிக்கு ஆள்பிடித்து, 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, ஆட்களை உட்கார வைத்து அவர்களுக்கு பிரியாணி கொடுக்காமல் சப்பாத்தியை ரோல் செய்து கொடுத்து கஷ்டப்பட்டு உட்கார வைத்தார்கள்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியா?- கமலஹாசன் பதில்
இவர் பேசும்போதே, பாதி பேர் எழுந்து சென்றுவிட்டார்கள். நாற்காலி எல்லாம் காலியாக இருந்தது பார்த்திருப்பீர்கள். ஆனால், நாகரிகம் கருதியிருக்க வேண்டும். என்னை, சி.வி. சண்முகத்தை, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடியை தரக்குறைவாக. அவன், இவன் என்று சொன்னார். என்னை அவன் என சொன்னால், நான் சொல்லுவேன். வார்த்தைக்கு வார்த்தைதான். என்னையும் சரி, சண்முகத்தையும் சரி, இபிஎஸையும் சரி ஒருமையில் விமர்சனம் செய்கிறார். இது, விரக்தியின் உச்சம் என்று தெரிவித்துள்ளார்.