கர்நாடகாவில் காங்கிரஸுக்கு ஆதரவாக பரப்புரையா? கமல்ஹாசன் சொல்வது என்ன?

By Narendran S  |  First Published Apr 28, 2023, 6:27 PM IST

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக கர்நாடகாவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. மேலும் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பணக்கார கட்சியாக வளரும் பாரத ராஷ்டிர சமிதி.. 1250 கோடி கட்சி நிதியை எட்டிய சந்திரசேகர் ராவின் கட்சி

Latest Videos

இந்த நிலையில் கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச இன்னும் நேரம் உள்ளது. போட்டியாளர்கள் நண்பர்களாக இருக்க முடியும் என்பதற்கு நானும் ரஜினியுமே உதாரணம். நீங்க வேணும்னா எங்க பேரச் சொல்லி அடிச்சிக்கலாம். ஆனால் எங்கள் நட்பு 45 வருடங்களாகத் தொடர்கிற நட்பு. OTT, TVயால் சினிமா அழியாது.

இதையும் படிங்க: தமிழ் தாய் வாழ்த்து பாடலின் மெட்டும், டியூன் சரியில்லாததால் தான் பாதியில் நிறுத்தப்பட்டது..! அண்ணாமலை விளக்கம்

காலண்டரில் பெருமாள் படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது. இறையாண்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன். காங்கிரஸ்க்கு ஆதரவு அளிக்குமாறு ராகுல்காந்தி என்னிடம் பேசினார். இதனால் கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வது குறித்த விரிவான பதில் நாளை வெளியாகும். மக்களை தேர்தலில் நல்ல முடிவு ஏற்பட இப்போதிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

click me!