பாஜக நிர்வாகிகளை அண்ணாமலை கண்டிக்கனும்.!இல்லைனா எங்களுக்கும் எதிர்வினையாற்ற தெரியும் எச்சரிக்கும் ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Apr 28, 2023, 2:22 PM IST

அதிமுகவை விமர்சிக்கும் பா.ஜ.க நிர்வாகிகளை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கும் எதிர்வினையாற்ற தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


அமித்ஷாவிடம் பேசியது என்ன.?

சென்னை ராயபுரத்தில்,அதிமுக நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றப்பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், மரியாதை நிமித்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக கூறினார்.  சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்தும், சட்டம் ஒழுங்கு நிலவரம், ஊழல்கள், நிதி அமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் தெரிவித்ததாக கூறினார்.  நிதியமைச்சர் ஆடியோ தொடர்பாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த விவகாரத்தில் இதுவரை முதலமைச்சர் வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Tap to resize

Latest Videos

வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை..! சட்டம் ஒழுங்கை காப்பாற்ற திறனில்லாமல் நாடகம் போடும் முதல்வர்- அண்ணாமலை

அண்ணாமலை கண்டிக்க வேண்டும்

கர்நாடகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், பாடலை முழுமையாக பாடவிட்டிருக்க வேண்டும் என கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் நடத்திய மாநாட்டில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய நிர்வாகிகளை ஒருமையில் பேசியதை கண்டித்த ஜெயக்குமார், முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர் நாகரீகம் கருதி பேச வேண்டும் எனவும் ஓ.பி.எஸ் விரக்தியின் உச்சியில் இருப்பதாக விமர்சித்தார். அதிமுகவை  பா.ஜ.க நிர்வாகிகள் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், பா.ஜ.க நிர்வாகிகளை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கும் எதிர்வினையாற்ற தெரியும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஐடி சோதனை நடத்தி திமுகவை அச்சுறுத்த முடியாது..! மத்திய அரசுக்கு எதிராக இறங்கி அடிக்கும் உதயநிதி

click me!