கடந்த 2021ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளில் சென்னையில் உள்ள நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் சென்றபோது அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எதிர்பாராத விதமாக சந்தித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளில் சென்னையில் உள்ள நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ரூ.230 கோடி செலவில் மருத்துவமனை கட்டிடம் 6 தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவை அழைக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றார்.
இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மூவை சந்தித்து கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா அழைப்பிதழை கொடுத்தார். பின்னர், குடியரசுத் தலைவர் மருத்துவமனை திறப்பு விழா வருவதற்கு சம்மதம் தெரிவித்து ஜூன் 5ம் தேதி சென்னை வருகை தரவுள்ளார்.
குடியரசுத் தலைவருடனான சந்திப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். அப்போது மும்பை செல்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் விமான நிலையம் வந்திருக்கிறார். அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்தனர். பின்னர், விமானத்திற்காக விஐபி அறையில் காத்திருந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
Smt met Shri , Hon'ble Chief Minister of Tamil Nadu, at the Indira Gandhi International Airport in New Delhi on her way to Mumbai. pic.twitter.com/aPV7D9hoSk
— NSitharamanOffice (@nsitharamanoffc)
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மும்பை செல்வதற்காக டெல்லி இந்தியா காந்தி விமான நிலையத்திற்கு சென்ற போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக மத்திய அமைச்சர் சீதாராமன் ட்வீட் செய்துள்ளார்.