வருமான வரி சோதனை அவ்வப்போது நடைபெறுகிறது.யார் மீதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா.? யார் மீதாவது குற்றம் சாட்டப்பட்டுள்ளதா.? யாராவது தண்டிக்கப்பட்டுள்ளார்களா.? என கேள்வி எழுப்பிய உதயநிதி ஐ.டி.ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என கூறினார்.
மாணவர்களுடன் உதயநிதி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட பிரிவு சார்பில் , நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அண்ணா பல்கலைகக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பரந்தாமன், இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி தானும் நாட்டு நலப்பணிகள் திட்டத்தில் உறுப்பினராக இருந்துள்ளதாகவும், தமிழக மாணவர்கள் எல்லா வகையிலும் ஆக்கபூர்வமான பணிகள் செய்து வருவதாகவும் அவர்களுக்கு தனது வாழ்த்துகள் என தெரிவித்தார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கும் நாட்டு நலப்பணி திட்ட பேரணியில் பங்கேற்கும் மாணவர்கள் விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என உறுதியளித்தார்.
திமுகவை அச்சுறுத்த முடியாது
சமூக சேவையுடன் கல்வியும் முக்கியம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதியிடம் ஜி ஸ்கொயர் நிறுனவத்தில் நடைபெற்ற ஐடி சோதனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், வருடம் வருடம் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா.? குற்றம்சாட்டப்பட்டுள்ளதா.. யாராவது தண்டிக்கப்பட்டுள்ளார்களா.? ஐ.டி.ரெய்டு நடத்துவது மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என கூறினார். திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் வருகிறதே என கேட்டதற்கு, திமுக மீது எப்போதும் குற்றச்சாட்டுகள் தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் அதை எல்லாம் தகர்த்து எரிந்து தான் பணியாற்றி வருவதாக கூறினார்.
தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு
நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு, பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோ கூட வெளியானது அதை யாரும் கேட்பதில்லை, அவர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது அதை யாரும் கேட்பதில்லை என்னை மட்டும் கேள்வி கேட்குறீர்கள் என கூறினார். துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அந்த செய்தி பற்றி தெரியாது என கூறினார்.
இதையும் படியுங்கள்
முதுமலை யானை முகாமில் பாகனை தாக்கிக் கொன்ற யானை..! வெளியான அதிர்ச்சி தகவல்