சுட்டெரிக்கும் கோடை வெயில்.. பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட பரபரப்பு தகவல்.!

By vinoth kumar  |  First Published Apr 28, 2023, 12:36 PM IST

தமிழகத்தில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து  சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ்  ஆலோசனை மேற்கொண்டார். 


 அதிமுக ஆட்சியில் 515 பள்ளிகள் விதிமுறைகளை பின்பற்றாமலேயே தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் கூறியுள்ளார். 

தமிழகத்தில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து  சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ்  ஆலோசனை மேற்கொண்டார். 

Latest Videos

இதையும் படிங்க;- அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி தடையில்லா மின்சாரம்.! மின்வாரியம் அதிரடி உத்தரவு..!

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பின் மகேஷ்;- தமிழ்நாட்டில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

பள்ளிகள் திறந்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 515 பள்ளிகள் விதிமுறைகளை பின்பற்றாமலேயே தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 19ம் தேதி 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 18ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்றார். 

இதையும் படிங்க;- கட்டாயப்படுத்தி எம்பிபிஎஸ் படிக்க வைத்த பெற்றோர்.. மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி.!

விடுமுறை நாட்களில் சிறுவர்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம். வெயில் அதிகமாக இருப்பதால் ஜூனில் தாமதமாக பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து துடிவுி எடுக்கப்படும் என  என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 

click me!